Last Updated:
கேரளாவில் நர்சிங் கல்லூரி மாணவர்களை சித்ரவதை செய்த 5 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். புகாரின் பேரில் விசாரணை நடத்தி, காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
கேரளாவில் நர்சிங் கல்லூரி மாணவர்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த சீனியர் மாணவர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
கோட்டயம் காந்திநகர் பகுதியில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களை, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்துள்ளனர். முதலாமாண்டு மாணவர்களின் அந்தரங்க உறுப்புகள் மற்றும் விரல் நகங்களை காயப்படுத்தி பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.
சில மாணவர்களுக்கு வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்ததுடன், அவற்றை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க : லிப்ட் கொடுத்து அழைத்துச் சென்ற நபர்.. நடுக்காட்டில் ரத்த வெள்ளத்தில் அரங்கேறிய திகில் சம்பவம்!
விசாரணையில் முதலாமாண்டு மாணவர்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டது உறுதியானது. அதைத்தொடர்ந்து ராகிங்கில் ஈடுபட்ட மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 5 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்துள்ளது.
February 13, 2025 11:10 AM IST
மாணவர்களை நிர்வாணப்படுத்தி டார்ச்சர்… கேரள நர்சிங் கல்லூரியில் பகீர்… சீனியர் மாணவர்கள் 5 பேர் கைது

