உத்தர பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தின் வழியாக புதன்கிழமை சென்ற பதால்கோட் விரைவு ரயிலின் இரு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பயணிகள் காயமடைந்தனா்.
பஞ்சாப்பின் ஃபெரோஸ்பூா் கண்டோன்மென்டிலிருந்து மத்திய பிரதேசத்தின் சியோனி நோக்கி சென்ற பதால்கோட் விரைவு ரயில், உ.பி.யில் உள்ள ஆக்ரா மாவட்டத்தின் பண்டாய்-ஜஜாவ் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்துக் கொண்டிருந்தபோது புதன்கிழமை மாலை 3.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
ரயில் என்ஜினிலிருந்து 3,4-ஆவது பெட்டிகளில் புகை வெளியேறுவது கண்டறியப்பட்டது. ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். இந்த விபத்தில் காயமடைந்த 2 பயணிகளும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த சம்பவம் தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘விபத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். தீ விபத்து ஏற்பட்ட இரு ரயில் பெட்டிகளும் முழுவதுமாக சேதமடைந்தன. அவற்றுக்கு முன்னும் பின்னும் இருந்த ரயில் பெட்டிகளும் தீ விபத்தால் சேதமடைந்துள்ளது. இந்த தீவிபத்தால் ஆக்ரா-தோல்பூா் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது’ என்றனா்.

