Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சண்டை நிறுத்தம்: சிந்து நதி நீர் திறப்பா? – முக்கிய தகவலை தெரிவித்த வெளியுறவுத் துறை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 13, 2025
in அரசியல் செய்திகள்
0
சண்டை நிறுத்தம்: சிந்து நதி நீர் திறப்பா? – முக்கிய தகவலை தெரிவித்த வெளியுறவுத் துறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 13, 2025 7:11 PM IST

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது. இந்நிலையில், தற்போது சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த பின் அதன் நிலை என்ன?

News18News18
News18

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதை நிறுத்தும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இதற்கு முன்னதாக தாக்குதல் நடந்த மறுநாள் அதாவது ஏப்ரல் 23ஆம் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் மிகவும் முக்கியமானது, ​​சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது.

இந்நிலையில் இது தொடர்பாக தற்போது பேசியுள்ள வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தனது ஆதரவை கைவிடும் வரை, இந்த ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்திருக்கும்.

நல்லெண்ணம் மற்றும் நட்பின் உணர்வில் 1960 இல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதன் மூலம் பாகிஸ்தான் இந்தக் கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியாகவே தீர்க்க வேண்டும் என்பது எங்கள் நீண்டகால தேசிய நிலைப்பாடு. அந்தக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. நிலுவையில் உள்ள விஷயம் என்னவென்றால், பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதியை விட்டுக்கொடுப்பதுதான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.



.

Previous Post

அந்தமானில் ஒரு வாரம் முன்பே தொடங்கிய தென்மேற்கு பருவ மழை! தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை? வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

Next Post

ஆளுநர் ரவியுடனான உறவு முதல் மாநில உரிமை வரை! ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிரத்யேக பேட்டி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆளுநர் ரவியுடனான உறவு முதல் மாநில உரிமை வரை! ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிரத்யேக பேட்டி!

ஆளுநர் ரவியுடனான உறவு முதல் மாநில உரிமை வரை! ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிரத்யேக பேட்டி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In