சமீபத்தில் கேரளாவில் தாமதமாகத் தொடங்கிய பருவமழை காரணமாக நீர் தேங்கியதால், காய்ச்சல் (டெங்கு, எலிக்காய்ச்சல், புளூ, மலேரியா) உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் அதிகமாகியுள்ளது. டெங்கு கொசுக்கடி மூலம் பரவுவதால் கேரளா-தமிழ்நாடு போக்குவரத்தின் காரணமாக, டெங்கு எளிதில் பரவ முடியும் என்பதால் தமிழக அரசு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதை கண்காணித்து உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க உறுதிகொண்டுள்ளது.

