“1972 ஆம் ஆண்டிலிருந்து அதிமுகவில் நான் பயணித்து வருகிறேன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி நான், என்னுடைய உழைப்பிற்கு கட்சியில் அமைப்புச் செயலாளர், அமைச்சர், சபாநாயகர் பொறுப்புகளை கொடுத்தார்;
மாமன்னன்’ படம் என்னுடைய சாயலில் வெளிவந்திருந்தால் அது அம்மாவுக்கு கிடைத்த வெற்றி.!”
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான துயரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைப்பெற்று இருந்தாலும் கூட அரசியல் மாற்றம் பொதுவாக நடந்திருக்கிறது, என்று முன்னாள் சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் இது ஒரு பிளாப் படம், வெறும் திமுக நபர்கள் மட்டுமே பார்கிறார்கள் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.



