அதேபோல் உங்கள் Fastag அக்கவுன்ட் Blacklist-ல் இருந்து, அது உங்களுக்குத் தெரியாதபட்சத்தில், நீங்கள் டோல்கேட்டைக் கடந்திருந்தால்… அப்போதும் உங்களுக்கு இரட்டைக் கட்டணம் வசூலிக்கப்படும்.

இன்னொரு முக்கியமான விஷயம் – நீங்கள் டோல்கேட்டைக் கடந்துவிட்டீர்கள். பணமெல்லாம் முறையாக எடுக்கப்பட்டது என்று வைத்துக்கொள்வோம்; நீங்கள் டோலைக் கடந்த 10 நிமிடத்தில் உங்கள் அக்கவுன்ட் ஏதோ சில காரணங்களால் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டது என்றாலும், பரிவர்த்தனை ரத்து ஆகி உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். ஆனால், இப்போது ஒருமுறை வேண்டுமானால் திரும்பப் பெறலாமாம். இந்த விதிமுறைகளை மீறும் டோல் பயனாளர்களிடம் இருந்து இரட்டை அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும்.
உங்கள் கார், ஃபாஸ்டேக் பார்கோடைக் கடந்து 15 நிமிடங்கள் ஆனபிறகு, டோல்கேட் பரிவர்த்தனைகளை நிகழ்த்தாமல் இருந்தீர்கள் என்றால், அதற்கும் கூடுதல் கட்டணம்.
