நடிகர் தனுஷ் நடிக்கும் கலாம் படத்தின் போஸ்டர் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
நடிகர் தனுஷ் இட்லி கடை, குபேரா ஆகிய படங்களில் நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்த இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.
மேலும், ’தேரே இஸ்க் மெயின்’ என்ற படத்தில் தனுஷ் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக இயக்குநர்கள் மாரி செல்வராஜ், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரின் படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், எதிர்பாராத விதமாக ஆதி புருஷ் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் இயக்கும் ‘கலாம் – தி மிஷைல் மேன் ஆஃப் இந்தியா’ என்ற மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
