இந்திய அதிகாரிகள் வெளியேற உத்தரவு
பாகிஸ்தான் அரசின் அறிக்கையில், “இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் மட்ட உறுப்பினர், அவரது சலுகை பெற்ற அந்தஸ்துக்கு முரணான செயல்களில் ஈடுபட்டதற்காக விரும்பத்தகாத நபராக பாகிஸ்தான் அரசு அறிவிக்கிறது” என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை இந்திய உயர்மட்ட அதிகாரிகள், பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்துக்கு வரவழைக்கப்பட்டு இந்த முடிவு குறித்து தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
