Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Exit poll: ஜார்க்கண்ட் – மகாராஷ்டிரா; NDA முன்னிலை… கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 20, 2024
in அரசியல் செய்திகள்
0
Exit poll: ஜார்க்கண்ட் – மகாராஷ்டிரா; NDA முன்னிலை… கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜார்க்கண்ட் தேர்தல்: கருத்துக்கணிப்பு முடிவுகள்!

ஜார்க்கண்ட் மாநிலத்​தின் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டமாக நடந்து முடிந்திருக்கிறது. 81 தொகுதிகள் இருக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதற்கட்டத் தேர்தல், 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ம் தேதியும், மீதமிருந்த 38 தொகுதிகளுக்கு இன்றும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்தத் தேர்தலுக்கு முன்பு, ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 5 மாதங்களுக்குப் பிறகு ஜூலை 28-ம் தேதி ஜாமீனில் வெளிவந்தார்.

ஜார்கண்ட் தேர்தல்

ஹேமந்த் சோரன் முதல்வர் பதவிக்கு வந்ததும், கட்சியின் முக்கிய நிர்வாகியான சம்பாய் சோரன் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் ஐக்கியமானார். இந்த நிலையில்தான் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

இந்த தேர்தலில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும், சம்பாய் சோரனை முன்னிறுத்தி, பா.ஜ.க தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 23-ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக்கணிப்பு வெளியாகியிருக்கிறது. 41 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக்கும் என்ற நிலையில்,

சம்பாய் சோரன் – ஹேமந்த் சோரன்

People’s Pulse

இந்தியா கூட்டணி – 24 – 37

தேசிய ஜனநாயக கூட்டணி – 44 – 53

மற்றவை – 5 – 9

Matrize

இந்தியா கூட்டணி – 25 – 30

தேசிய ஜனநாயக கூட்டணி – 42 – 47

மற்றவை – 1 – 4

என்கிற ரீதியில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன!

மகாராஷ்டிர தேர்தல்: கருத்துக்கணிப்பு முடிவுகள்!

மகாராஷ்டிர மாநிலத்தின் 288 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாடி (MAVIA) கூட்டணியில் களம் காண்கின்றன. மறுபுறம், பா.ஜ.க, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாயுதி கூட்டணியில் தேர்தலை எதிர்க்கொண்டிருக்கின்றன.

மகாராஷ்டிரா தேர்தல்: கருத்துக்கணிப்பு முடிவுகள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி வெற்றிப் பெற்றது. அதனால், சட்டமன்றத் தேர்தலிலும் அதே வெற்றி மீண்டும் உறுதிசெய்யப்படலாம் என அரசியல் வல்லுநர்கள் நம்புகின்றனர். ஆனால், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி அரசு, மாநிலம் முழுவதும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி தேர்தலில் மீண்டும் களமிறங்கியிருக்கிறது. எனவே இந்தத் தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி தீவிரமாகியிருக்கிறது. இந்த நிலையில்தான் தேர்தல் முடிவுகள் குறித்தக் கருத்துக்கணிப்பு வெளியாகியிருக்கிறது. 145 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற நிலையில்,

People’s Pulse

பாஜக கூட்டணி – 182

காங்கிரஸ் கூட்டணி – 97

மற்றவை – 9

P-Marq

பாஜக கூட்டணி – 137 – 157

காங்கிரஸ் கூட்டணி – 126 – 146

மற்றவை – 2 – 8

ஏக்நாத் ஷிண்டே

Matrize

பாஜக கூட்டணி – 150 – 170

காங்கிரஸ் கூட்டணி – 110 – 130

மற்றவை – 8 – 10

News 24 + Chanakya Strategies

பாஜக கூட்டணி – 152 – 160

காங்கிரஸ் கூட்டணி – 130 – 138

மற்றவை – 6 – 8

Lokshahi Marathi – Rudra

பாஜக கூட்டணி – 128 – 142

காங்கிரஸ் கூட்டணி – 125 – 140

மற்றவை – 18 – 23



.

Previous Post

ஜார்க்கண்ட் தேர்தல்: மொத்த வாக்குப்பதிவு நிலவரம்!

Next Post

மீண்டும் காங்கிரஸ்க்கு பட்டை நாமம்! மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி! தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மீண்டும் காங்கிரஸ்க்கு பட்டை நாமம்! மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி! தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்!

மீண்டும் காங்கிரஸ்க்கு பட்டை நாமம்! மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி! தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In