Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Exclusive : தமிழ்நாடு, EVM முதல் எல்லை பிரச்னை வரையிலான கேள்விகள்.. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் பிரத்யேக பேட்டி…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 13, 2024
in அரசியல் செய்திகள்
0
Exclusive : தமிழ்நாடு, EVM முதல் எல்லை பிரச்னை வரையிலான கேள்விகள்.. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் பிரத்யேக பேட்டி…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மக்களவை தேர்தலில் பாஜக தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் வெற்றி பெறும் தொகுதிகள் முதல் சீனா எல்லை பிரச்னை வரை பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியூஸ் 18-க்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

நாட்டில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் நியூஸ் 18 குழுமத்திற்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பல விவாதங்களையும் கிளப்பியது.

விளம்பரம்

அதன் தொடர்ச்சியாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியூஸ் 18 குழுமத்தின் ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

40 வருடங்களில் நான் பல தேர்தல்களைப் பார்த்திருக்கிறேன். பல தேர்தல்களுக்கான வியூகங்களை உருவாக்கியிருக்கிறேன். பல தேர்தல்களில் மற்றவர்களுக்காக உழைத்திருக்கிறேன். எல்.கே. அத்வானியின் முதல் தேர்தலையும் நான்தான் மேற்பார்வையிட்டேன். 1989-ம் ஆண்டு முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிட்டார்.அதற்கு முன்பு அவர் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. எனக்கு இப்போது கிட்டத்தட்ட அதே வயதுதான். அப்போது அவருக்கு 62 வயது இருந்திருக்க வேண்டும்.

விளம்பரம்

நாங்கள் நிச்சயமாக 400 தொகுதிகளுக்கும் அதிகமாக வெற்றி பெறுவோம். என்று நான் நம்புகிறேன். ஆனால் எதிர்க்கட்சிகள் பல வெறுப்பூட்டக் கூடிய, சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டு பிரச்னைகளை திசை திருப்ப பார்க்கின்றன.

INDI கூட்டணியில் உள்ள மோதல்கள் முன்னணியில் உள்ளன. கேரளாவில் CPM மற்றும் காங்கிரஸ் இடையேயான போட்டி ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் அவர்கள் கூட்டணி அமைத்துள்ளனர். ஆனால் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் மற்றும் காங்கிரஸ் கட்சி எதிரணியில் உள்ளது.

எதிர்க்கட்சிகளுக்கு ஒரு தலைவர் இல்லை. கொள்கை இல்லை, நாட்டைப் பற்றிய எண்ணம் இல்லை. அவர்கள் எப்படி நட்பு மற்றும் உணர்வுடன் செயல்படுவார்கள்? இத்தகைய சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால பதவிக்காலமும், அவரது 50 ஆண்டுகால பழுதற்ற பொது வாழ்க்கையும் மக்களை ஊக்கப்படுத்துகிறது. இந்த நாட்டை உலக அரங்கிற்கு கொண்டு செல்வது அவரால் மட்டுமே முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

விளம்பரம்

மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் தெலுங்கானாவில் பாஜகவுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. முதலில் கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பாஜகவுக்கு எந்த தொகுதியும் கிடைக்காது என்று கருதி இருந்தோம். ஆனால் இங்கு நிச்சயம் பாஜக முக்கிய விளைவை ஏற்படுத்தும்.

கேரளாவில் பாஜக இந்த முறை வெற்றி கணக்கை தொடங்கும். வாக்கு சதவீதமும் அதிகரிக்கும். இரண்டு அல்லது மூன்று தொகுதிகளில் கேரளாவில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. நிச்சயமாக ஒரு தொகுதியில் இங்கு வெற்றி பெறும்.

விளம்பரம்

தமிழ்நாட்டில் கேரளா போன்ற நிலைமை தான் உள்ளது. கண்டிப்பாக தமிழ்நாட்டில் 2 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். 4 அல்லது 5 தொகுதிகளில் பாஜக வலுவான நிலைமையில் உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவில் நல்ல ரிசல்ட்டை பாஜக எதிர்பார்க்கிறது. தெலுங்கானாவிலும் நிலைமை வளர்ச்சி அடைந்துள்ளது. எதிர்க்கட்சியினரை விடவும் நாங்கள் நல்ல நிலைமையில் உள்ளோம்.

இது தேசிய அளவில் நடக்கக்கூடிய தேர்தல். நாட்டின் தலைவரை கவனத்தில் கொண்டு மக்கள் வாக்களிப்பார்கள். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தின் மோசமான நாட்களை மக்கள் மறக்கவில்லை. அதுபோன்ற அரசு அமைய மக்கள் விரும்ப மாட்டார்கள். பாஜக அரசுக்கு தொலைநோக்கு திட்டங்கள் உண்டு. காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை பார்த்தால் அவர்கள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளனர்.

விளம்பரம்

மக்களுக்கு எது தேவையோ அதை மிக சரியாக பாஜக அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் பிரதமராக மோடி பொறுப்பு ஏற்பார். ஆனால் எதிர்க்கட்சி தரப்பில் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அங்கு தலைவராக யார் இருக்கிறார்? எதிர்க்கட்சி ஏதோ ஐந்து ஆண்டுகளுக்கு 5 பிரதமரை கொண்டு வருவதாக கூறுகிறார்கள். யார் அந்த 5 பேர். அவர்களில் யார் முதலில் பிரதமராக பொறுப்பு ஏற்பார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

விளம்பரம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பாஜக மோசடி செய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது. தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் அந்த கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. அவர்கள் கூறும் குற்றச்சாட்டு உண்மை என்றால் அந்த 2 மாநிலங்களிலும் காங்கிரஸ் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். நாடு முழுவதும் சுமார் 12 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்படவில்லை.

மின்னணு வாக்குப்பதிவு குறித்து தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் சிறுபிள்ளைத்தனமானது. தங்களது தோல்வியை மறைக்க எதிர்க்கட்சிகள் அப்படி கூறுகின்றன. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-யை பாஜக தவறாக பயன்படுத்தியது கிடையாது. யார் தவறு செய்கிறார்களோ, யார் ஊழல் செய்கிறார்களோ, அவர்கள் சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்கப்படுகிறார்கள்.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சுதந்திரமாக செயல்படுகின்றன. நாங்கள் சொல்வது போல் அவர்கள் நடப்பது கிடையாது. மற்ற வெளிநாடுகளில் அரசியலில் மத்திய அரசு தலையிடாது. அந்த நாடுகளும் இந்தியாவில் நடக்கும் பிரச்சனைகளில் தலையிடக்கூடாது என்பதில் மத்திய அரசு மிக தெளிவாக உள்ளது. கடந்த காலங்களில் பலவீனமான அரசை இந்தியா கொண்டிருந்தது. இன்று வலிமையான பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் பாதுகாப்பாக உணர்கின்றனர்.

இந்தியர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். அவரது புகழுக்கு இதுவும் ஒரு காரணம். பாஜக ஆட்சி காலத்தில் சீனா இந்தியாவின் நிலத்தை அபகரிக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் தான் சீனா இந்திய நிலங்களை ஆக்கிரமித்தது. அவர்களது ஆட்சிக் காலத்தில் நடந்த போரில் இந்தியா தோல்வியடைந்தது. அப்போது இழந்த நிலங்கள் குறித்து காங்கிரஸ் கட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.

பாஜக ஆட்சியில் இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. இந்தியாவை தாக்க முயல்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு சிறந்த வசதிகள் மற்றும் நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளோம்.

உத்தர தாக்கரே பாஜகவுக்கு துரோகம் செய்தார். அவரது தந்தை பால் தாக்கரே முன்வைத்த கொள்கைகள் ஒவ்வொன்றாக அவர் கைவிட்டு விட்டார். குறிப்பாக அவர் இந்துத்துவாவை கைவிட்டார். நான் கட்சியை கலைப்பேன், ஆனால் காங்கிரசுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று பால் தாக்கரே கூறி இருந்தார். அதனை உத்தரவு தாக்கரே கைவிட்டு விட்டார். பிரதமர் மோடி மற்றும் பாஜகவால் மட்டுமே மகாராஷ்டிராவின் நலன்களை பாதுகாக்க முடியும் என்று ஒட்டுமொத்த மகாராஷ்டிரா மக்களும் நம்புகின்றனர். அவர் அவர்கள் பிரதமர் மோடியை முழுமையாக ஆதரிக்கிறார்கள்.

நான் செல்லும் இடமெல்லாம் பாஜகவுக்கு வரவேற்பு இருக்கிறது. எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் யாரையும் நான் தொகுதியில் சந்திக்கவில்லை. ஒவ்வொரு சமூகத்தினரும் பிரதமர் மோடியுடன் செல்ல விரும்புகிறார்கள். மகாராஷ்டிரா தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாக்குகள் பதிவாகும் என்று நம்புகிறேன். அந்த வாக்குகள் முழுவதும் பிரதமர் மோடிக்காக தான் இருக்கும்.

காங்கிரஸ் கட்சியும், உத்தவ் தாக்கரேவும் மும்பையை பிரிக்க விரும்புகின்றனர். அதற்கான கொள்கை மற்றும் திட்டம் அவர்களிடம் உள்ளது. மும்பை மக்கள் ஒருவர் ஒருவருக்கொருவர் சண்டையிட அவர்கள் விரும்புகின்றனர். குறைந்த வருமானம் பெரும் குடும்பங்கள் உயர்தர வீடுகளில் மறுவாழ்வு அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி உத்திரவாதம் அளித்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள அனைத்து குடிசைவாசிகளையும் அவர்கள் வசிக்கும் இடத்தில் விரைவில் மறுவாழ்வு அளிக்க விரும்புகிறோம். அதே இடத்தில் அவர்களுக்கு புதிய நல்ல வீடு கிடைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் கொள்கை.

இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு. மத நல்லிணக்கம் இந்தியாவில் பேணப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் அவரது மதங்களை பின்பற்றி வருகின்றனர்.

அரசியல் தளத்தை பொறுத்த அளவில் பல்வேறு பிரச்சினைகளுக்காக அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன. இந்த சூழலில் முஸ்லிம் மதகுரு ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நான் கண்டிக்கிறேன். இது சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும். எந்த மத குருவுக்கும் எந்த கட்சிக்கும் வாக்களிக்குமாறு கூறும் உரிமை கிடையாது. மற்ற மத குருக்கள் எந்த கட்சிக்கும் வாக்களிக்க வேண்டும் என்று இதுவரை கூறியுள்ளார்களா? மதத்தையும் அரசியலையும் ஒன்றாக கலக்கக்கூடாது. காங்கிரஸ் கட்சி இந்திய ராணுவத்தை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறது. குறைந்தபட்சம் அந்த கட்சி இராணுவத்தை விட்டு வைத்திருக்கிறது.

மும்பை தீவிரவாத தாக்குதலின் போது மும்பையை நமது பாதுகாப்பு படையினர் காப்பாற்றினர். 2008 ஆம் ஆண்டு நடந்த மோதலில் என்னுடைய நண்பர்கள் உட்பட பலர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார்கள். தற்போது முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதில் உத்தவ் தாக்கரே ஆர்வம் காட்டி வருகிறார். எங்களுடைய கொள்கைப்படி முஸ்லிம்களையும் எங்களுக்கு வாக்களிக்க கோரிக்கை வைத்துள்ளோம். சமீப காலமாக முஸ்லிம்களின் ஆதரவு பாஜகவுக்கு அதிகரித்து வருகிறது. அவர்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

.



.

Previous Post

சீனாவில் மில்லியனுக்கும் அதிகமான உய்குர் மக்கள் சிறையில் அடைப்பு – அமெரிக்கா அதிர்ச்சி தகவல்

Next Post

Vikatan Plus – 19 May 2024 – கார்ட்டூன்: அம்பானி… அதானி… காங்கிரஸ்… | cartoon vikatan plus may 19 2024

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Vikatan Plus – 19 May 2024 – கார்ட்டூன்: அம்பானி… அதானி… காங்கிரஸ்… | cartoon vikatan plus may 19 2024

Vikatan Plus - 19 May 2024 - கார்ட்டூன்: அம்பானி... அதானி... காங்கிரஸ்... | cartoon vikatan plus may 19 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In