
Last Updated:
மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் மருத்துவமனை விரைந்தனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
92 வயதாகும் மன்மோகன் சிங்கிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் இரவு 8 மணிக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் மருத்துவமனை விரைந்தனர். நரசிம்மராவ் பிரதமராக இருந்த 1991-96 இல் நிதியமைச்சராக திறமையாக செயல்பட்ட மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பிரதமராக கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 வரை இரண்டு முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மன்மோகன் சிங் கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
December 26, 2024 10:22 PM IST
