Saturday, September 19, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வந்தே பாரத்: பெட்டிகளை பாதியாக குறைத்தும் மூன்றில் ஒரு பங்கு கூட நிரம்பாத இருக்கைகள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 13, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வந்தே பாரத்: பெட்டிகளை பாதியாக குறைத்தும் மூன்றில் ஒரு பங்கு கூட நிரம்பாத இருக்கைகள்
21
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

2019 பிப்ரவரியில் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. தற்போது 25 வழித்தடங்களில் 50 ரயில்கள் இயங்குகின்றன.

இந்த மாத இறுதிக்குள் இன்னும் 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது.

வந்தே பாரத் ரயிலின் வேகம் குறித்த கேள்விகள், இந்த ரயிலுக்கான தேவை உண்மையில் அதிகமாக உள்ளதா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. தற்போது பல வந்தே பாரத் ரயில்கள் 8 பெட்டிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டாலும், அதிலும் பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது.

போபாலின் ராணி கம்லாபதி நிலையத்திலிருந்து ஜபல்பூருக்குச் செல்லும் வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகள் மட்டுமே உள்ளன. எனினும், இந்த ரயிலில் 2023 ஏப்ரல் 1 முதல் 2023 ஜூன் 29 வரை சராசரியாக 32 சதவீத பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர்.

அதே ரயில் 36 சதவீத பயணிகளுடன் மட்டுமே போபால் திரும்பியது. இந்த ரயில் 16 பெட்டிகளுடன் இயங்கி இருந்தால் வெறும் 15 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரம்பி இருக்கும்.

கேஎஸ்ஆர் பெங்களூரு – தார்வாட் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 60 சதவீத இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ரயிலிலும் 8 பெட்டிகள் மட்டுமே உள்ளன. ஏறக்குறைய அதே எண்ணிக்கையிலான பயணிகளுடன் அந்த ரயிலில் பெங்களூரு திரும்பியது.

உச்சபட்சமாக, இந்தூர் மற்றும் போபாலுக்கு இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலில்தான் மிகக் குறைவான பயணிகள் வருகை பதிவாகியுள்ளது. 21 சதவீத பயணிகள் மட்டுமே இந்த வழித்தடத்தில் பயணித்துள்ளனர். ரயில் மீண்டும் இந்தூர் திரும்பிய போது 29 சதவீத பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர்.

டெல்லி காண்ட் முதல் அஜ்மீர் நோக்கி செல்லும் ரயில் 61 சதவீத பயணிகளுடன் மட்டுமே பயணித்துள்ளது. மும்பையில் மட்கான் முதல் சிவாஜி டெர்மினஸ் வரை செல்லும் வந்தே பாரத் ரயிலில் 55 சதவீத பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர். இந்த வகையில், பெரும்பாலான வந்தே பாரத் ரயில்களில் குறைவான பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர்.

Previous Post

மறு அறிவிப்பு வரும் வரை MBBS நெக்ஸ்ட் (NExT) தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.

Next Post

துபாய் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் குழும நிறுவனமான நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் எப்படி? – அண்ணாமலை கேள்வி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
துபாய் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் குழும நிறுவனமான நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் எப்படி? – அண்ணாமலை கேள்வி

துபாய் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் குழும நிறுவனமான நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் எப்படி? - அண்ணாமலை கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In