தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளவில்லை
தேசிய அளவில் ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என இந்தியாவின் அனைத்து மாநில ஜனநாயக சக்திகளும் குரல் கொடுத்து வருகிறோம். அதன் அடிப்படையில் இச்சட்டத்தை இயற்றலாமா என மாநில அரசுகளின் கருத்தை ஒன்றிய அரசு கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அதற்கு எந்தவொரு மாநில அரசும் ஆதரவாக பதிலளிக்கவில்லை.
தமிழ்நாடு அரசுகூட பின்பற்றுவதில்லை
உச்ச நீதிமன்றம் ஆணவப்படுகொலைகள் தொடர்பாக, “எப்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு என்ன இழப்பீடுகள் தர வேண்டும், காவல்துறை அதிகாரிகளின் உடனடி கடமைகள் என்ன?’ என்பது குறித்த சில வழிகாட்டுதல்களைத் தந்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றதன் இந்த வழிகாட்டுதல்களைக்கூட தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநில அரசு சரியாகப் பின்பற்றுவதில்லை என்பது வருத்தமளிக்கிறது.
அமித் ஷா சந்திப்பு
இதுதொடர்பாக நேற்று (ஜூலை 30) உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க முயற்சி செய்தோம். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. உள்துறை அலுவலகத்தில் ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்திருக்கிறோம்” என்றார்.
