Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஈரோடு – ஜோலார்பேட்டை ரயில் 11-ம் தேதி ரத்து

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 9, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ஈரோடு - ஜோலார்பேட்டை ரயில் 11-ம் தேதி ரத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சேலம்: சேலம் வழியாக இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வரும் ஈரோடு- ஜோலார்பேட்டை இடையிலான பயணிகள் ரயில், 11-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், கோவை – சென்னை சென்ட்ரல் இடையிலான இன்டர்சிட்டி விரைவு ரயிலும் கோவை – காட்பாடி வரை மட்டுமே வரும் 11, 18, 25, ஆகஸ்ட் 1 ஆகிய 4 நாட்களுக்கு இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சேலம் வழியாக, ஈரோடு- ஜோலார்பேட்டை இடையே இரு மார்க்கத்திலும் பயணிகள் ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஈரோட்டில், காலை 6.25 மணிக்கு புறப்பட்டு, ஜோலார்பேட்டைக்கு நண்பகல் 12.10 மணிக்கு சென்றடையும் ஈரோடு- ஜோலார்பேட்டை பயணிகள் ரயிலானது,11-ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில், ஜோலார்பேட்டையில் மாலை 3.10 மணிக்குப் புறப்பட்டு, ஈரோட்டுக்கு இரவு 7.45 மணிக்கு வந்தடையும் ஜோலார்பேட்டை- ஈரோடு பயணிகள் ரயிலும், 11-ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இன்டர்சிட்டி ரயில்: இதனிடையே, கோவை – சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி விரைவு ரயிலானது வரும் 11, 18, 25, ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் காட்பாடி – சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் – காட்பாடி இடையிலான ரயில் பாதையில், சித்தேரி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, கோவையில் இருந்து காலை 6.20 மணிக்குப் புறப்படும் கோவை – சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி (எண்.12680) விரைவு ரயிலானது வரும் 11, 18, 25, ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் கோவை – காட்பாடி வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது. காட்பாடி – சென்னை சென்ட்ரல் இடையே ரயில் இயக்கம் ரத்து செய்யப்படுகிறது.

மறு மார்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.35 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர்சிட்டி ( எண்.12679) விரைவு ரயிலானது, வரும் 11-ம் தேதி, 18, 25, ஆகஸ்ட் 1-ம் தேதி ஆகிய நாட்களில், சென்னை சென்ட்ரல் – காட்பாடி இடையே இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாறாக, காட்பாடி – கோவை இடையே மட்டும் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

.

Tags: 11மஈரடததரததரயலஜலரபடட
Previous Post

மன அழுத்தம் வராமல் இருக்க.. இதை பாலோ பண்ணுங்க.. இளம் தலைமுறையினருக்கு முன்னாள் டிஜிபி அட்வைஸ்

Next Post

தேர்தல் தொடர்பான வன்முறையில் 10 பேர் பலி: மேற்குவங்க மாநிலத் தேர்தல் ஆணையம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தேர்தல் தொடர்பான வன்முறையில் 10 பேர் பலி: மேற்குவங்க மாநிலத் தேர்தல் ஆணையம்

தேர்தல் தொடர்பான வன்முறையில் 10 பேர் பலி: மேற்குவங்க மாநிலத் தேர்தல் ஆணையம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In