Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஈரோடு தேர்தல்: நோட்டா 326%, சீமான் 123%, திமுக 5% – ஆனாலும் பெரியார் மண்ணில் பலிக்காத சீமானின் கனவு! | Erode by election results an over view

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 9, 2025
in அரசியல் செய்திகள்
0
ஈரோடு தேர்தல்: நோட்டா 326%, சீமான் 123%, திமுக 5% – ஆனாலும் பெரியார் மண்ணில் பலிக்காத சீமானின் கனவு! | Erode by election results an over view
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த 2021 ம் ஆண்டில் இந்தத் தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது பதிவான மொத்த வாக்குகள் 1,51,292. இதில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள், 11,629 (7.7%). அடுத்து, 2023-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள், 1,70,190. இதில், நாம் தமிழர் கட்சி பெற்றது 10,827 வாக்குகள் (6.4%). இந்த 2024-ல் நடைபெற்றிருக்கும் இடைத்தேர்தலில் மொத்தம் பதிவானது 1,54,657 வாக்குகள். இதில் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்திருப்பது 24,151 வாக்குகள் (15.6%). முந்தைய தேர்தலைவிட 13,314 வாக்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. தற்போது கிடைத்திருக்கும் கூடுதல் வாக்குகளை முந்தைய வாக்குகளுடன் ஒப்பிட்டால், கிட்டத்தட்ட 123% வளர்ச்சி.

சீமான் - ஸ்டாலின்

சீமான் – ஸ்டாலின்

தி.மு.க-வின் வாக்குகளைக் கணக்கிட்டால்… 2021-ல் 67,300 வாக்குகள் (44.5%), 2023-ல் 1,10,156 (64%), 2024-ல் 1,15,709 (74.7%). முந்தைய தேர்தலை ஒப்பிடும்போது, தற்போது 5,553 வாக்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. இது, சுமார் 5% வளர்ச்சி.
நோட்டாவின் வளர்ச்சி, 2021 ல் மொத்தம் பதிவான வாக்குகளைக் கணக்கிடும்போது, 1,546 வாக்குகள் (1.02%). இதுவே, 2023 தேர்தலில் 1,432 வாக்குகள் (0.84%). இந்த 2024 தேர்தலில் 6,109 வாக்குகள் என உயர்ந்துள்ளது (3.94%). அதாவது, முந்தைய தேர்தலைவிட 4,677 வாக்குகள் நோட்டாவுக்குக் கூடுதலாகக் கிடைத்துள்ளன. இது, 326% எனும் அபார வளர்ச்சி.

கடந்த 2023 தேர்தலை ஒப்பிடும்போது, இந்தத் தேர்தலில் 15,533 பேர் வாக்களிக்கவில்லை. 2023 இடைத்தேர்தலில் அ.தி.மு.க பெற்ற வாக்குகள், 43,923. இந்தத் தேர்தலில் குறைந்துபோன இந்த 15,533 வாக்குகளை அ.தி.மு.க-வின் வாக்குகள் என்று ஒரு கணக்குக்காக எடுத்துக் கொள்வோம். மீதமுள்ள 28,390 வாக்குகள் வாக்குகள்தான் தி.மு.க-வுக்கு 4,800, நாம் தமிழருக்கு 13,314, நோட்டாவுக்கு 4,677, மீதமுள்ளவை சுயேச்சைகள் பலருக்குமாக பிரிந்துள்ளன.

இதெல்லாம் இடைத்தேர்தல் கணக்குகளே. இதை வைத்தெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. ஆம், சீமானுக்கும் நோட்டாவுக்கும் கூடுதலாகக் கிடைத்த வாக்குகள்… என்பது, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் ஒதுங்கிக் கொண்டதால் கிடைத்தவையே என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதேசமயம், அந்தப் பலன் மொத்தமாக சீமானுக்கே போய்ச் சேரும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். சீமான் கட்சியினருக்கும் அது கனவாகவே இருந்தது. இதை எதிர்பார்த்தே தி.மு.க-வும் பலமாகக் களமாடியது. கடைசியில், பெரியார் மண்ணில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை.



.

Previous Post

சொல்லப் போனால்… முதுகெலும்பும் முட்டுக்கொடுப்புகளும்!

Next Post

மகா கும்பமேளாவில் 41 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகா கும்பமேளாவில் 41 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

மகா கும்பமேளாவில் 41 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In