Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 25, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ரெய்டுகளுக்கு பயந்து நீதி ஆயோக் கூட்டத்துக்கு செல்லவில்லை; தமிழக நலனுக்காகவே சென்றதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

நீதி ஆயோக் கூட்டத்துக்கு கடந்த 3 ஆண்டுகள் செல்லாமல், தற்போது மட்டும் முதல்வர் ஸ்டாலின் ஏன் பங்கேற்கச் செல்கிறார்? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு பதிலளிக்கும்வகையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்ததாவது, மாநில முதல்வர்கள் பங்கேற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைநகர் தில்லிக்கு செல்கிறேன் என்ற செய்தி வெளியானதுமே, அரசியல் எதிரிகள் வன்மத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள்.

“இத்தனை ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இந்த முறை கலந்து கொள்வது ஏன்?” என்றும், “டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுகளில் கிடைத்துள்ள ஆவணங்களால் எதிர்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க முதல்வர் செல்கிறார்” என்றும், “வெள்ளைக் கொடி ஏந்திச் செல்கிறார்” என்றும் கற்பனைச் சிறகுகளைப் பறக்கவிட்டு, அலாதி இன்பம் கண்டனர் அரசியல் எதிரிகள்.

ஆதரவளிப்பதாக இருந்தாலும், எதிர்ப்பதாக இருந்தாலும் தன் நிலையில் உறுதியாக இருக்கும் இயக்கம் திமுக என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்ற பண்பட்ட அரசியல் தலைவர்களும் திமுகவின் நிலைப்பாட்டை நன்கு அறிந்தவர்கள்.

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசிப்பதற்கான நீதி ஆயோக் கூட்டம் என்பதாலும், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாகக் கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் நிலைப்பெற்றிருப்பதாலும், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதியாக – மாநில முதல்வராக அதில் பங்கேற்றேன்.

குடும்பச் சொந்தங்கங்கள் மீதும் வியாபாரக் கூட்டாளிகள் மீதும் தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் ரெய்டு நடத்தியதும், சொந்தக் கட்சியினர் உள்பட யாருக்கும் தெரியாமல் அவசரமாக தில்லிக்குப் பறந்து சென்று, அங்கு மீடியாக்கள் சூழ்ந்து கொண்டதும், கட்சி அலுவலகத்தைப் பார்க்கப் போகிறேன் என்று கூறிவிட்டு, 4 கார்கள் மாறி மாறி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைப் பார்த்து, தன்னையும் கட்சியையும் ஒட்டுமொத்தமாக அடமானம் வைத்துக் கூட்டணி அமைத்தவர், என்னுடைய தில்லிப் பயணம் குறித்து ஏதேதோ அளந்துவிட்டதை இரசித்தபடியே தில்லிக்குப் புறப்பட்டேன்.



.

Previous Post

வாக்களிக்க செல்லும்போது செல்போன் எடுத்து போக ஏற்பாடு.. தேர்தல் ஆணையம் புதிய முடிவு!

Next Post

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம்! ஞானசேகரன் வழக்கில் வரும் 28ஆம் தேதி தீர்ப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம்! ஞானசேகரன் வழக்கில் வரும் 28ஆம் தேதி தீர்ப்பு!

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம்! ஞானசேகரன் வழக்கில் வரும் 28ஆம் தேதி தீர்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In