அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம்
இந்நிலையில், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்கியும், நீர்த்துப்போகவும் செய்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும்; மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, பெரம்பூர் தொகுதி, கொடுங்கையூரில் மயான பூமி அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கி விரைந்து முடித்திடவும்; டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், மணலி சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்திடவும், வட சென்னையை விஷ நகரமாக்கும் கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தின் சார்பில், 2.6.2025 திங்கட் கிழமை காலை 10 மணியளவில், சென்னை மாநகராட்சி, மண்டலம் 4க்கு எதிரில் அமைந்துள்ள தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
