Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மணிப்பூர் இன்னும் உதவிக்காக அழுதுகொண்டிருக்கிறது..! திடீரென விழித்த RSS..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 12, 2024
in அரசியல் செய்திகள்
0
மணிப்பூர் இன்னும் உதவிக்காக அழுதுகொண்டிருக்கிறது..! திடீரென விழித்த RSS..
6
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தல் நடந்த முடிந்து மூன்றாவது முறையாக மோடி தலைமையில் என்.டி.ஏ அரசும், புதிய அமைச்சரவையும் அமைந்துவிட்டது. ஆனால், சரியாக ஓராண்டுக்கு முன்பு மணிப்பூரில் வெடித்த வன்முறை மட்டும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பா.ஜ.க தலைமையிலான இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெற்றுவரும் மணிப்பூரில் அமைதியின்மை தொடர்ந்த பாடாகவே இருக்கிறது.

மணிப்பூர் வன்முறை - பாஜக

மணிப்பூர் வன்முறை – பாஜக

நேற்றுகூட முதல்வர் பிரேன் சிங்கின் கான்வாய் மீது ஒரு கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மணிப்பூர் அமைதிக்காகக் காத்திருப்பதாகவும், தேர்தல் கொண்டாட்டத்திலிருந்து வெளிவந்து நாட்டின் பிரச்னைகளைக் கவனிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கிறார்.

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மற்றும் அதில் பயிற்சி பெற்றவர்கள் மத்தியில் உரையாற்றிய மோகன் பகவத், “மணிப்பூர் ஒரு வருடமாக அமைதிக்காகக் காத்திருக்கிறது. இதற்கு முன் 10 வருடங்களாக மாநிலம் அமைதியாக இருந்தது. பழைய துப்பாக்கி கலாசாரம் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தோன்றியது. ஆனால், திடீரென உருவாக்கப்பட்ட அல்லது தூண்டப்பட்ட வன்முறை இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. அது உதவிக்காக அழுதுகொண்டிருக்கிறது. யார் இதைக் கவனிப்பது… முன்னுரிமை அடிப்படையில் இந்தப் பிரச்னையை பரிசீலனை செய்வது நம் கடமை.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

தேர்தல் என்பது ஒருமித்த கருத்தை உருவாக்குதற்கான ஒரு செயல்முறை. அதுமட்டுமல்லாமல் இதுவொரு போட்டிதானே தவிர போர் அல்ல. எனவே, தேர்தல் கொண்டாட்டங்களிலிருந்து வெளிவந்து, நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதேபோல், எதிர்க்கட்சிகளை எதிரியாகப் பார்க்கக்கூடாது. அவர்களின் கருத்தும் வெளிச்சத்துக்கு வரவேண்டும். உலகம் முழுவதும் சமூகம் மாறிவிட்டது. அதன் விளைவாக முறையான மாற்றங்களும் ஏற்பட்டிருக்கிறது. அந்த மாற்றம்தான் ஜனநாயகத்தின் சாராம்சம்” என்று கூறினார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மணிப்பூரில் மொத்தமுள்ள இரண்டு தொகுதிகளிலுமே பாஜக தோல்வியடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

28 ஆண்டுகால சட்டப் போராட்டம் – அதே பழைய ரூபாய் நோட்டுகள்; லஞ்சப் பணத்தை மீட்ட கோவை சமூக ஆர்வலர் | Coimbatore activist gets his money back after 28 years

Next Post

ஒடிசாவில் முதன் முறையாக அமையும் பாஜக ஆட்சி… முதல்வரானார் மோகன் மாஜி..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒடிசாவில் முதன் முறையாக அமையும் பாஜக ஆட்சி… முதல்வரானார் மோகன் மாஜி..

ஒடிசாவில் முதன் முறையாக அமையும் பாஜக ஆட்சி... முதல்வரானார் மோகன் மாஜி..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In