மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மதுரை கட்டிட பொறியாளர்கள் சங்கம், மற்றும் கட்டுமானம் மனைத் தொழில் கூட்டமைப்பு சார்பாக கட்டிட பணிக்கு தேவையான எம்.சேண்ட்,பி.சேண்ட் மற்றும் ஜல்லி ஆகிய கட்டுமான பொருள்களின் கடுமையான விலையேற்றத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், ஒரு நாள் அடையாளக் கட்டிட வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் அகில இந்திய கட்டுனர்கள் சங்கம் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
உடன் அசோசியேசன் சிவில் இன்ஜினியர் தலைவர் சஞ்சய், துணைத்தலைவர் பொன் இரவிச்சந்திரன், செயலாளர் குமரேஷ் பாபு, உசிலம்பட்டி கட்டிடப் பொறியாளர் தலைவர் லெனின் சிவா, செயலாளர் அருண் பிரகாஷ், தண்டபாணி, செந்தில் முருகன், ஆகியோர்களும், சங்கங்களின் பொறியாளர்களும், உறுப்பினர்களும் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

