ஜியோ நிறுவனத்தின் இந்த செயல்பாடுகளுக்கு கடுமையான எதிர்வினையாற்றிய “ஸ்டார்லிங்க்’ தொலைத் தொடர்பு நிறுவனத் தலைவர் எலான் மஸ்க், ஏல நடைமுறையின் போது லாபி செய்யப்படலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தி, தன் எக்ஸ் பக்கத்தில், “செயற்கைக்கோள் அகண்ட அலைவரிசைக்கு, ஏல நடைமுறையை அமல்படுத்த, இந்திய அரசுக்கு முகேஷ் அம்பானி அழுத்தம் அளித்துவருவது, இதுவரை எந்த வகையான நடைமுறையிலும் இல்லாதது. உலகளவில் செயற்கைக்கோள் வழி அகண்ட அலைவரிசை உரிமம் நிர்வாகரீதியாக ஒதுக்கீடு செய்யப்படுவதே நடைமுறை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக இரண்டு பெரும் நிறுவனங்களுக்கு மத்தியில் இருந்த புகைச்சல் இந்தப் பதிவுகளால் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த நிலையில்தான், மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியா, “உலகம் முழுவதும் செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் நிர்வாக ரீதியாகவே ஒதுக்கப்படுகிறது. எனவே, இந்தியாவும் இதே உலகில்தான் இருக்கிறது. வேறுபட்ட முறையில் செயல்படவில்லை. விலை நிர்ணயம் என்னவாக இருக்கும் என்பதை தீர்மானிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அரசியலமைப்பின் மூலம் அதிகாரம் பெற்றுள்ளது. எனவே, இந்தியாவில் செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு, ஏலம் முறையில் நடைபெறாது” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
