டெஸ்லா எனும் மின்சார வாகன கனவு
SpaceX நிறுவனத்தில் எலான் மஸ்க்கின் கடினமான பணிகளுக்கு மத்தியில், மின்சார வாகன (EV) புரட்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளார். 2004 இல், அவர் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராக சேர்ந்தார். பின்னர் அதன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளராக ஆனார். டெஸ்லாவின் நோக்கம் உலகின் நிலையான ஆற்றலுக்கான மாற்றத்தை துரிதப்படுத்துவதாகும். மஸ்க்கின் தலைமையின் கீழ், டெஸ்லா ரோட்ஸ்டர், மாடல் எஸ், மாடல் 3, மாடல் எக்ஸ் மற்றும் மாடல் ஒய் உள்ளிட்ட பல புதிய மின்சார வாகனங்கள் சந்தைகளில் அறிமுகம் ஆகி உள்ளன.