Last Updated:
244 மாவட்டங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. மக்கள் தயாராக இருக்க, பயத்தை குறைக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த முக்கிய நோக்கங்களாக இருந்தது.
காஷ்மீர் பஹல்காம் தாகுதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இன்று அதிகாலை 1.05 மணி முதல் 1.30 மணிவரை பாகிஸ்தானுக்குள் நுழைந்து அங்கிருக்கும் ஒன்பது பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியது. அதேசமயம், நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கப்பட்டது போல் இன்று நாடு முழுவதும் உள்ள 244 மாவட்டங்கள் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
இன்று (7ஆம் தேதி) நாடு முழுக்க உள்ள 244 மாவட்டங்களில் போர் கால பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்தப் பாதுகாப்பு ஒத்திகையின் மூலம், போர் அல்லது அவசர காலத்தில் மக்கள் எப்படி தயாராக வேண்டும். வான் வழி தாக்குதல், போர், ஏவுகணை தாக்குதல் உள்ளிட்ட நேரங்களில் மக்களும், அரசு நிர்வாகமும் எப்படி அதனை எதிர்கொள்கிறது, மக்களின் பயத்தை குறைப்பது, குழப்பங்களை தவிர்ப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உயிரிழப்புகளை குறைப்பது உள்ளிட்டவற்றை அடிப்படை நோக்கமாக கொண்டு தத்ரூபமான போர் ஒத்திகை நடைபெற்றது.
நாடு முழுவதும், இன்று மாலை போர்க்கால ஒத்திகை நடைபெற்றது. தமிழ்நாட்டில் கல்பாக்கம், சென்னை துறைமுகம் ஆகிய இருபகுதிகளிலும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. அதேபோல், மத்தியப்பிரதேசம், நாடாளுமன்றத்தின் வடக்கு மற்றும் தெற்கு பிளாக்குகள், குடியரசுத் தலைவர் மாளிகை, ராஜஸ்தான், டெல்லி, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம் என பல பகுதிகளிலும் மின் துண்டிப்பு செய்யப்பட்டும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையும் மேற்கொள்ளப்பட்டது.

