நடைமுறைகளும் வழிமுறைகளும்:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), தேர்தல் விதிமுறைகள், ‘நோட்டா’ (NOTA) உள்ளிட்ட தேர்தல் முறைகள் குறித்த ஆய்வுகள்.
நினைவலைகளும் அனுபவங்களும்:
உங்கள் முதல் வாக்களிப்பு அனுபவம், மறக்க முடியாத சுவாரஸ்யமான தேர்தல் நினைவுகள், உங்கள் ஊரின் தேர்தல் சூழல்.
வாக்காளரின் எதிர்பார்ப்பு:
இன்றைய வாக்காளர், இளைஞர்கள் தேர்தலைப் பார்க்கும் விதம், தேர்தல் பிரசாரங்கள் குறித்த உங்கள் கருத்து.
கட்டுரையைச் சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள்
கண்ணியம் காக்க: உங்கள் கட்டுரை நாகரிகமான, கண்ணியமான நடையில் அமைய வேண்டும். தனிநபர் விமர்சனங்கள், தரம் தாழ்ந்த சொற்கள், வன்முறையைத் தூண்டும் கருத்துகளைத் தவிர்க்கவும். உங்கள் கருத்துக்கள் ஆதாரங்களின் அடிப்படையிலும், ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்.
உங்கள் கட்டுரையை, உங்கள் முழுப் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் ஒரு Word File ஆக தயார் செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
my@vikatan.com
தேர்ந்தெடுக்கப்படும் தரமான, வீரியமான படைப்புகள் விகடன்.காம் இணையதளத்தில் உங்கள் பெயருடன் வெளியிடப்படும்.
உங்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
