ஆந்திரம்: கைலாசபட்டணம் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.
ஆந்திரம் மாநிலம் அனகாபள்ளி மாவட்டம், கைலாசபட்டணம் கிராமத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஒரு பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுமார் 15 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.45 மணியளவில் திடீரென பயங்கர சப்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிச்சத்தம் கேட்டதும் சம்பவ இடத்திற்கு ஒடிவந்த கிராம மக்கள், வெடிவிபத்தில் சிக்கி சிதறிக் கிடந்த உடல்கள்களை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள், காயமடைந்த நிலையில் கிடந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
