இதனைத் தொடர்ந்து திருச்சி மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லைத் தரப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கண்டித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், ” திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 4-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. பெண்கள், குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் எந்த விதமான அச்சமும் இன்றி அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. ஸ்டாலின் அவர்களே- பல்வேறு குற்றச்செயல்கள் நடந்து வரும் இவ்வேளையில் விளம்பர போட்டோ ஷூட்டிங் சுற்றுலாவில் நீங்கள் இருப்பது ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கும் வேளையில், நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல உள்ளது. ஒரு 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, படிக்கும் பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை நடத்துகிறீர்கள்.

