Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

முதல்வர் தொகுதியில் தனி குழு அமைத்த அதிமுக : ஸ்கெட்ச் போட்ட எடப்பாடியார்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 9, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
முதல்வர் தொகுதியில் தனி குழு அமைத்த அதிமுக : ஸ்கெட்ச்  போட்ட எடப்பாடியார்.
4
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: கொளத்தூர் தொகுதியில் பூத் கமிட்டியை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ள அதிமுக தனிக்குழு அமைத்துள்ளது. தனிக்குழுவை அமைத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு அளித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி திருப்திகரமாக இல்லாததால், அதனை ஒருங்கிணைத்து அமைக்க தனிக்குழு அமைத்துள்ளார். இன்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு கூட்டணி பேச்சுவார்த்தையை கட்சிகள் தொடங்க உள்ளன. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜ வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும், அதிமுகவிற்கும் பாஜவிற்கும் இடையேயான உறவு முழுவதுமாக முறிந்து விட்டது. எந்தவித ஒட்டும் உறவும் இல்லை என்று வெளிப்படையாகவே அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். பாமகவும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் பெரிய கட்சிகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் மெகா கூட்டணியை அமைப்போம் என்று எடப்பாடி கூறி வருகிறார்.

கடந்த 26ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘அதிமுக உயிரோட்டம் உள்ள கட்சி. எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்கவோ முடக்கவோ முடியவில்லை என்று ஆவேசமாக பேசினார். கூட்டம் முடிந்த அடுத்த சில நாட்களில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 9ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி அதிரடியாக அறிவித்தார்.

இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிஅளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொளத்தூர் தொகுதியில் பூத் கமிட்டியை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ள அதிமுக சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கொளத்தூர் தொகுதியில் பூத் கமிட்டியை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ள அதிமுக தனிக்குழு அமைத்துள்ளது. தனிக்குழுவை அமைத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு அளித்துள்ளார்.

Previous Post

துணைவேந்தருக்கான தேடுதல் குழு: திரும்ப பெற்ற ஆளுநர் ரவி- இதுதான் காரணம்!

Next Post

பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் பாஜக அரசுக்கு கொடுத்த சாட்டை அடி – கி.வீரமணி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் பாஜக அரசுக்கு கொடுத்த சாட்டை அடி – கி.வீரமணி

பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் பாஜக அரசுக்கு கொடுத்த சாட்டை அடி - கி.வீரமணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In