சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ராகுல் நவீன் அமலாக்கத்துறை செயல் தலைவராக இருந்த காலத்தில்தான், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் பணமோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

ராகுல் நவீன் இருந்த காலத்தில் தான் அமலாக்கத்துறை என்றால் என்ன என்பதை பொதுமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரிந்தது. அமலாக்கத் துறைக்கு கைது செய்யும் அதிகாரம் இருப்பதே அதன்பிறகே தெரிந்தது. எனவே ராகுல் நவீன் அமலாக்க துறையை மேன்மேலும் சிறப்படைய வைப்பார் என்று நம்புகிறேன்