Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தொண்டரை தலையில் அடித்து கீழே இறங்கச் சொன்ன அமைச்சர்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 5, 2024
in Default
1
தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தொண்டரை தலையில் அடித்து கீழே இறங்கச் சொன்ன அமைச்சர்..
91
SHARES
146
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இன்னும் சில நாட்களில் நாடு முழுதும் மக்களவைத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள், பிரச்சாரங்கள் என நாடே களைகட்டியுள்ளது. தமிழகத்திலும் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்கும் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டன. 

இந்த நிலையில், ஏர்வாடியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தொண்டரை தலையில் அடித்து கீழே இறங்கச் சொன்ன பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளராக ஏணி சின்னத்தில் ‘சிட்டிங் எம்பி நவாஸ் கனி’ போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக நேற்று இரவு ஏர்வாடி தர்கா முன்பு பரப்புரையில் ஈடுபட்டபோது, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு மாலை அணிவிக்க ஆர்வத்தில் ஒரு தொண்டர் வாகனத்தில் ஏறினார். அமைச்சர் அந்த தொண்டரை தலையில் அடித்து ‘இறங்குடா கீழே’ என அதட்டலாக கூறி இறக்கிவிட்ட சம்பவம் திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜாதியை சொல்லி இழிவாகப் பேசுவது, பொதுவெளியில் அநாகரிமாக நடந்து கொள்வது என, சர்ச்சைகளுக்கு பெயர் போன அமைச்சர் ராஜகண்ணப்பனின் இந்த செயல் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் முகம் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பரப்புரையின் போது தங்கள் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு தொண்டர்கள் சால்வை அணிவிப்பதும், மாலை அணிவித்து வரவேற்பது மரியாதை செய்வதும் வழக்கம். ஆனால் இதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத அமைச்சர் ராஜகண்ணப்பனின் இந்த செயலானது அருவருக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. தங்கள் கட்சியின்  வெற்றிக்காக பாடுபடும் கடைகோடியில் இருக்கும் தொண்டர்களுக்கு எந்த சலுகையும் செய்யாத திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், ஆர்வத்தில் மாலை அணிவிக்க வாகனத்தின் மேலே ஏறிய தொண்டர் ஒருவரை அடித்து இறக்கி கீழே தள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அருவருப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதற்கு மற்றொரு கோணமும் உள்ளது. வீடியோவை பார்த்தால், அதில் மற்றும் ஒரு நபர் ஏற இடம் இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது. அந்த தொண்டர் ஏறி இருந்தால், அனைவருக்கும் நெருக்கடி ஏற்பட்டு யாரேனும் கீழே விழும் சூழலும் ஏற்பட்டிருக்கலாம். இதன் காரணமாகவும் அமைச்சர் உஷார் நிலையில் தொண்டர் ஏறுவதை தவிர்த்திருக்கலாம். எனினும், அதை சொன்ன விதமும் தலையில் தட்டி அதட்டிய விதமும் அதிர்ச்சியை அளிக்கின்றது. 

Previous Post

அட்டகாசமான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை; கல்விக்கடன் தள்ளுபடி, மாநிலங்கள் கையில் நீட் தேர்வு; பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு..

Next Post

பாஜக ஆட்சியில் நிறுத்தப்பட முதியோருக்கான 50% ரயில் கட்டண சலுகை மீண்டும் அமல்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜக ஆட்சியில் நிறுத்தப்பட முதியோருக்கான 50% ரயில் கட்டண சலுகை மீண்டும் அமல்..

பாஜக ஆட்சியில் நிறுத்தப்பட முதியோருக்கான 50% ரயில் கட்டண சலுகை மீண்டும் அமல்..

Comments 1

  1. Raja lingam Velachery Chennai says:
    3 years ago

    No comments 😭😭😭😭😔😔😔😔😔

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In