இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம், தனது சேவை பயன்பாட்டில் மிகப்பெரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
3 நாட்களாக அதன் சேவை முடங்கிப்போனதால், விமான நிலையங்களில் பயணிகள் கொந்தளித்தனர். குறிப்பாக, வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை 62 விமானங்கள் ரத்தான நிலையில், 62 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் சென்னை விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விமானங்களின் சேவை ரத்து செய்யப்படுவது குறித்து முறையான அறிவிப்பு வழங்கப்படவில்லை என்று பயணிகள் குற்றம்சாட்டினர்.
ஐயப்ப பக்தர்கள், சபரிமலைக்கு செல்ல முடியாமல் பெங்களூரு விமான நிலையத்திலேயே நீண்ட நேரம் காத்திருந்தனர்.
#WATCH | Bengaluru, Karnataka: A large number of passengers are inconvenienced across the country, as IndiGo flights are facing delays and cancellations.
A passenger says, “…The IndiGo staff did not provide any dinner, water bottles, or any facilities. As per the Ayyappa… pic.twitter.com/m0lhFX46Wa— ANI (@ANI) December 5, 2025
இதேபோல காலமான தந்தையின் அஸ்தியை கரைக்க ஹரித்துவாருக்கு செல்ல முடியாமல் பெங்களூருவில் பெண் பரிதவித்தார்.
மகளுக்கு சானிட்டரி நாப்கின் கேட்டு, விமான நிலைய ஊழியர்களுடன் பயணி ஒருவர் கதறிய காட்சி, அவர்களின் மோசமான நிலையை உணர்த்தியது.
More than 550 IndiGo flights were cancelled today. Thousands of people are stuck in transit, a father was seen pleading for a sanitary pad for his daughter
Do we even have an aviation ministry? What is the minister doing? 🤡 pic.twitter.com/h5NxMoFeC9— Veena Jain (@Vtxt21) December 5, 2025
இதேபோல சொந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நேரில் செல்ல முடியாததால், ஒடிசாவைச் சேர்ந்த புதுமண தம்பதியர், கர்நாடகாவில் உள்ள உறவினர்களிடம் வீடியோ காலில் வாழ்த்து பெற்றனர். அடுத்தடுத்து விமான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதால், 17 மணி நேரம் மும்பை விமான நிலையத்தில் தங்கியிருப்பதாக இளம்பெண் ஆதங்கத்துடன் கூறினார்.
சென்னை மற்றும் டெல்லி விமான நிலையங்களில் இண்டிகோ சேவை நள்ளிரவு வரை முடங்கியது. ஏர் இந்தியா, ஸ்பை ஜெட் நிறுவன விமானங்கள் மட்டுமே இயங்கியதால், விமான பயண கட்டணம் பல மடங்கு உயர்ந்தது. சென்னை- கோவைக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. நேற்று மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவை ரத்தான நிலையில், பயணிகளிடம் இண்டிகோ நிறுவனத்தின் சிஇஓ Pieter Elbers மன்னிப்பு கோரினார். பயணிகளுக்கு முழு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இண்டிகோ விமான சேவை பாதிப்புக்கு, விமானி மற்றும் ஊழியர் பற்றாக்குறை, தொழில்நுட்ப பிரச்னையே காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், விமானிகளுக்கு வாரத்திற்கு 48 மணி நேரம் கட்டாய ஓய்வு என்ற விதிமுறையை மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் திரும்பப் பெற்றது. இண்டிகோ விமான சேவைகள் ரத்தான விவகாரத்தில், உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்க உத்தரவிட்டு 4 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது. இந்தியாவில் விமான சேவைகள் விரைவில் சீரடையும் என்றும், விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
December 06, 2025 7:14 AM IST
திடீரென ரத்தான இண்டிகோ விமான சேவையால் சிக்கல்.. தந்தையின் அஸ்தியுடன் தவித்த பெண்.. மலைக்கு செல்ல முடியாமல் ஐயப்ப பக்தர்கள் தவிப்பு!
