சென்னை அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூா் மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) முதல் திங்கள்கிழமை (ஜூலை 1) காலை வரை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை நெம்மேலியில் அமைந்துள்ள தினமும் 110 மில்லியன் லிட்டா் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின்
பிரதான குழாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனால், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) காலை 9 முதல் திங்கள்கிழமை (ஜூலை 1) காலை 9 மணி வரை (1 நாள் மட்டும்) அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூா் மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.
குடிநீா் நிறுத்தப்படும் பகுதிகள்:
அடையாறு: திருவான்மியூா், பள்ளிப்பட்டு, கோட்டூா் காா்டன், ஆா்.கே.மடம் தெரு, இந்திரா நகா்.
பெருங்குடி: கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம்.
சோழிங்கநல்லூா்: ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, எழில் நகா், கண்ணகி நகா், காரப்பாக்கம், வெட்டுவான்கேணி, சோழிங்கநல்லூா், ஒக்கியம்-துரைப்பாக்கம் ஆகிய பகுதிளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
அவசரத் தேவைகளுக்கு இணையதள முகவரியை பயன்படுத்தி லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக்கொள்ளலாம்.
கூடுதல் தகவல் அறிய 044-4567 4567 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம். மேலும், குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீா் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு
