Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் ‘திராவிட மாடலே’… கொஞ்சம்கூட வெட்கமாக இல்லையா? / No action from tamilnadu police in pocso crime, what was government doing in the issue?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 2, 2024
in அரசியல் செய்திகள்
0
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் ‘திராவிட மாடலே’… கொஞ்சம்கூட வெட்கமாக இல்லையா? / No action from tamilnadu police in pocso crime, what was government doing in the issue?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சாட்டையை சுழற்றியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றம்

இதெல்லாமே தமிழகக் காவல்துறையின் வீரப்பராக்கிரமங்கள்தான். ஆனால், இத்தகைய ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ கொண்ட இதே காவல்துறை, ‘தமிழகத்தின் தலைநகரிலிருக்கும் அண்ணா நகரில் பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்’ என்கிற குற்றச்சாட்டுக்கு கொடுத்த முக்கியத்துவம் என்ன தெரியுமா?

அந்தச் சிறுமியின் அப்பா மற்றும் அம்மாவை காவல் நிலையத்துக்கு வரவழைத்து, இரவெல்லாம் அடித்து உதைத்தது. அதுவும், குற்றம்சாட்டப்பட்ட சதீஷ் என்ற நபர் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவர் முன்பாகவே இந்தக் கொடுமையை அரங்கேற்றியிருக்கிறார், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் ராஜி. இப்படிப்பட்டவர், அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கே ஆய்வாளர், என்பதுதான் கொடுமையின் உச்சம். காக்கிச் சட்டையைப் போட்டுவிட்டாலே… ‘ஆணென்ன பெண்ணென்ன’தானோ?

இந்தக் கொடுமைகளுக்கு எதிராக, தாமாக முன்வந்து சாட்டையை சுழற்றியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், தற்போது வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

ஒரு வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்படுகிறது என்றால், அது மாநில காவல்துறைக்குத்தான் தலைகுனிவு. ஆக, காவல்துறையை தன் பாக்கெட்டுக்குள் வைத்திருக்கும் முதலமைச்சர் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

போக்சோ வழக்குபோக்சோ வழக்கு

போக்சோ வழக்கு

பாவம்… சிறையிலிருந்து வெளிவந்த ‘தியாகி’ செந்தில்பாலாஜுக்கு அடுத்த நொடிகளிலேயே மரியாதை செய்து, மீண்டும் மந்திரியாக்கி அழகு பார்க்க வேண்டும்; ஆருயிர் அன்புச்செல்வனுக்கு துணை முதல்வர் பதவி கிரீடத்தை வைத்து அழகு பார்க்க வேண்டும். அதற்கே நேரமில்லை… எனும்போது, இதற்கெல்லாம் எப்படி????

ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், ஓடோடிகூட வரவேண்டாம். ஊடகமாடிக்கூட வரலாம். அப்படித்தான் ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’ நாளிதழில் முதலில் இந்தக் கொடுமை குறித்து வெளியான கட்டுரையைப் படித்துவிட்டு, தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தது உயர் நீதிமன்றம். ஓட்டுவாங்கி வெற்றிபெறாத நீதிபதிகள்தான் ஓடோடி வந்தனர், அந்த அப்பாவி சிறுமிக்காக!



.

Previous Post

Minister Raghupathi: பொன்முடி பவர்ஃபுல் துறையில் இருந்து மாற்றப்பட்டதற்கு யார் காரணம்? – அமைச்சர் ரகுபதி விளக்கம்!-minister raghupathi said what is the reason of transfer of ponmudi porfolia

Next Post

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In