Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Dowry: ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு மருமகளை வீட்டை விட்டு வெளியேற்றிய மாமியார்.. வீடியோ வைரல்!  

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 19, 2025
in அரசியல் செய்திகள்
0
Dowry: ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு மருமகளை வீட்டை விட்டு வெளியேற்றிய மாமியார்.. வீடியோ வைரல்!  
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 19, 2025 7:59 AM IST

Dowry | அப்பெண்ணின் மாமியார் அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், அனைத்து நகைகளையும் வாங்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

News18News18
News18

இந்தியாவில் வரதட்சணை சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரதட்சணை கொடுமை நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஜலால்பூரில் வரதட்சணை கேட்டு பெண்ணை கணவர் வீட்டை விட்டு வெளியேற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பெண்ணில் பெயர் ரஞ்சனா யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அம்மாநிலத்தின் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் யாதவுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதற்கிடையே தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதை தொடர்ந்து அந்த பெண், உள்ளூர் காவல்துறையை அணுகி தனது மாமியார் தன்னை துன்புறுத்தியதாகவும், தனது நகைகள் அனைத்தையும் பறித்ததாகவும், ரூ.5 லட்சம் பணம் கேட்பதாகவும் புகார் அளித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு தனது கணவரின் வீட்டிற்கு குடிபெயர்ந்தபோது, ​​குளிர்சாதன பெட்டி, ஏர் கூலர், கட்டில், பீரோ மற்றும் மெத்தை ஆகியவற்றை வரதட்சணையாக வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், அவருடைய மாமியார் அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய அனைத்து நகைகளையும் வாங்கி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து ரூ.5 லட்சம் பணத்தை அவரது பெற்றோர் வீட்டில் வரதட்சணையாக வாங்கி கொண்டு வருமாறு மேலும் துன்புறுத்தியுள்ளனர். மேலும், மாமியார் மட்டுமின்றி, அவரது கணவர் ரமேஷ் குமார் மற்றும் மைத்துனர்கள் ஸ்ரீநாத் மற்றும் ரக்ஷராம் ஆகியோரும் அப்பெண்ணை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

अम्बेडकरनगर: विवाहिता को ससुराल से बाहर निकाला, दहेज की मांग का आरोप

🔸 ससुराल में दहेज न मिलने पर विवाहिता को घर से निकाला
🔸 पीड़िता का आरोप: जेठ और पति ने किया जबरन बाहर निकालने का प्रयास
🔸 वायरल हुआ वीडियो, जिसमें विवाहिता को खींचकर बाहर निकाला जाता है
🔸 2024 में जलालपुर… pic.twitter.com/UfJnVNii3H

— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) March 17, 2025

வரதட்சணை வாங்கி வர அப்பெண் மறுத்ததால் அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், வீட்டை விட்டு செல்ல மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது குடும்பத்தினர், வீட்டில் இருந்து வற்புறுத்தி அவரை வெளியேற்ற முயற்சி செய்துள்ளனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வீட்டின் நுழைவு வாயிலில் உள்ள கிரில் கேட்டை பிடித்துக் கொண்டு அப்பெண் செல்ல மறுப்பதை காண முடியும்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் தற்போது இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். போலீசார் வரதட்சணை கொடுமை என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து வருவதாக காவல் ஆய்வாளர் ஜெய் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

First Published :

March 19, 2025 7:59 AM IST





.

Previous Post

வெற்றிகரமாக பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்.. 9 மாத பதற்றங்களை தொடர்ந்து ஒரு ஹேப்பி எண்டிங்!

Next Post

மும்பை போட்டி: இன்று டிக்கெட் விற்பனை! கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மும்பை போட்டி: இன்று டிக்கெட் விற்பனை! கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க..!

மும்பை போட்டி: இன்று டிக்கெட் விற்பனை! கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In