Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ராமர் கோயில் வீடியோ..பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு எதிர்ப்பு.! ரியாத் நிகழ்ச்சியில் பங்கேற்பது டவுட் தான்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 29, 2024
in Default
0
ராமர் கோயில் வீடியோ..பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு எதிர்ப்பு.! ரியாத் நிகழ்ச்சியில் பங்கேற்பது டவுட் தான்..
71
SHARES
115
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு அதை போற்றி பேசி வீடியோ வெளியிட்ட பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு இணையத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அவர் தங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என ரியாத் தமிழ் சங்கம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் அனைவராலும் அறியப்படும் பிரபல பட்டிமன்ற பேச்சாளராக இருப்பவர் பாரதி பாஸ்கர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான இவர் பல்வேறு ஊர்கள், மாநிலங்கள், நாடுகளில் தமிழர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார். இந்த நிலையில் இவர் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது. ராமர் கோயிலுக்கு ஆதரவாக பாரதி பாஸ்கர் பேசியது கடுமையாக விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது.

நெட்டிசன்கள் பாரதி பாஸ்கர் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் சவுதி அரேபியா தலைநகர் ரியாதில் செயல்பட்டு வரும் பழமையான ரியாத் தமிழ் சங்கம் சார்பில் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி மாணவர் கலை விழா நடத்தப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அழைக்கப்பட்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் விளம்பரப் படத்தை பகிர்ந்து அவரை விழா ஏற்பாட்டாளர்கள் புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் எதிர்ப்புக் குரல்கள் வலுத்தன.

Riyadh Tamil Sangam has announced that Bharathi Bhaskar not participate in their event

இந்த நிலையில் இன்று ரியாத் தமிழ்ச் சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பாக நடக்க இருந்த மாணவர் கலை விழாவில் பங்கு பெறுவதற்காக வருகை புரியவிருந்த திருமதி. பாரதி பாஸ்கர் அவர்கள் சில தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட தேதியில் வர முடியாமல் போனமையால் ரியாத் தமிழ்ச் சங்கம் வேறு சில தமிழ் ஆளுமைகளை வைத்து குறிப்பிடப்பட்ட இடத்தில், நேரத்தில் இவ்வருடத்தின் மாணவர் கலைவிழாவை திட்டமிட்டபடி நடத்த இருக்கிறது.

அயலகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களின் கல்வி, கலைத் திறன், தனித் திறன், விளையாட்டு போன்றவைகளை ஊக்குவிக்கும் உயரிய நோக்கில் நடத்தப்படும் இந்த நிகழ்வில் பெரும் திரளாக கலந்து கொண்டு நம் கண்மணிகளாம் தமிழ் மாணவ – மாணவிகளின் திறமைகளை காண அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Previous Post

தொடர் பேனர் விழும் சம்பவங்கள்; 2 நாட்களில் இரண்டு பேர் படுகாயம்..

Next Post

தொலைபேசி வாயிலாக மிரட்டும் பா.ஜ.க – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தொலைபேசி வாயிலாக மிரட்டும் பா.ஜ.க – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

தொலைபேசி வாயிலாக மிரட்டும் பா.ஜ.க - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In