பத்திரிகையாளர் சந்திப்புக்கு கௌதம் கம்பீரை பிசிசிஐ அனுப்ப வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அவரை தாக்கிப் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. பார்டர் – கவாஸ்கர் தொடருக்கான சில இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது மீதமுள்ள வீரர்கள் இன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு முன்பு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார்.
