Health
oi-Halley Karthik
சென்னை: சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உணவில் சர்க்கரையின் அளவை நாம் கண்காணிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதே நாம் சர்க்கரையே எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் என்ன ஆகும்? என்பது குறித்தும் ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.
அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுன்னு ஓரு ஜூஸ் குடிச்சா நல்லா இருக்கும் என நினைக்கும் நமக்கு, அதில் இருக்கும் சர்க்கரை குறித்த எந்த அக்கறையும் இருப்பதில்லை. உலக அளவில் உடல் பருமன் நோய் வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சர்க்கரை நோய்தான். இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படியே போய்கொண்டிருந்தால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சரி சர்க்கரை நோய் என்றால் என்ன என்று பார்ப்போம். நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள குளுகோஸ் அதாவது சர்க்கரையை ஆற்றலாக மாற்ற கணையத்திலிருந்து பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்கும். இந்த இன்சுலின் சுரப்பு இயல்பாக இருக்கும் வரை எந்த பிரச்னையும் வராது. ஆனால், இது அளவுக்கு அதிகமாக சுரந்தாலோ, அல்லது குறைவாக சுரந்தாலோ சர்க்கரை வியாதி ஏற்பட்டுவிடும். உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை வரை நம்மை பாதிக்கும் ஒரே நோய் சர்க்கரை வியாதிதான்.
எனவே இதனை வரும் முன் காப்பது அவசியம். அதாவது சீரான உடற் பயிற்சி வேண்டும். மட்டுமல்லாது ஜூஸ், ஐஸ்கிரீம், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு பொருட்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்கலாம். சரி உணவில் சர்க்கரையே எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா?
இப்படி சர்க்கரை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதில் நிறைய பலன்கள் இருக்கின்றன. காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீ, காபியில் தொடங்கி இரவு உணவுக்கு பின் குடிக்கும் பால் வரை சர்க்கரை எல்லா இடத்திலும் நிரம்பி வழிகிறது. இது தவிர பன், பிஸ்கட், ஸ்வீட், மாவு சத்துக்கள் நிறைந்த பொருட்கள் போன்றவற்றிலும் சர்க்கரை இருக்கிறது. இப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்த இந்த பொருட்களை தவிர்க்க வேண்டும்.
தொடர்ச்சியாக 14 நாட்கள் இந்த பொருட்களை எடுத்துக்கொள்வதை தவிர்த்தால் கை மேல் பலன்கள் கிடைக்கும். அதாவது, முதலில் உணவு செரிமானம் சிறப்பாக இருக்கும். அதேபோல சருமம் முன்பு இருந்ததைவிட தற்போது மிகவும் அழகாக மாறிவிடும். மேலும், உடல் எடை டக்கென குறைந்துவிடும். பெரும்பாலானோருக்கு உடல் எடை அதிகமாக இருப்பதற்கு காரணம் இந்த சர்க்கரை நோய்தான்.
அதேபோல உடலின் எனர்ஜி முன்பை விட தற்போது பல மடங்காக அதிகரித்துவிடும். மேலும், ஹார்ட் அட்டாக் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் குறையும், காயங்கள் ஏற்பட்டிருப்பின் அது விரைவில் சரியாகிவிடும்.

ஆனால் இதையெல்லாம் செய்ய வேண்டும் எனில் முதலில் உங்கள் உடலின் சர்க்கரை அளவை தெரிந்துக்கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு முன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 60-110 வரை இருக்க வேண்டும். சாப்பிட்ட பின்னர் இந்த அளவு 80-140க்குள் இருக்க வேண்டும். இந்த அளவை தாண்டும் போதுதான் சர்க்கரை இருப்பது தெரிய வருகிறது. இதில் சோகம் என்னவெனில் பலருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்பதே தெரிய வருவதில்லை.
வேறு ஏதாவது ஒரு பிரச்னைக்கு மருத்துவமனைக்கு செல்லும்போது அங்குதான் சர்க்கரை நோய் இருப்பது தெரிய வருகிறது. அதன் பின்னர்தான் நோய்க்கான சிகிச்சையையே எடுத்துக்கொள்கிறார்கள். எனவே, முன்னரே அதாவது 30 வயதிலேயே சர்க்கரை நோய் குறித்து டெஸ்ட் செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். சிலருக்கு பரம்பரை பரம்பரையாக இந்த நோய் தொற்றிக்கொண்டு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English summary
As diabetes is on the rise in India, doctors are advising us to monitor the amount of sugar in our food. What happens if we don’t take sugar at all? Researchers also explain that

