Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விராட் கோலியின் ஃபார்மை வைத்து அவரை மதிப்பிடாதீர்கள்: ரிக்கி பாண்டிங்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 9, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
விராட் கோலியின் ஃபார்மை வைத்து அவரை மதிப்பிடாதீர்கள்: ரிக்கி பாண்டிங்
7
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விராட் கோலியின் தற்போதைய ஃபார்மை வைத்து அவரை மதிப்பிடாதீர்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் தொடர் வருகிற நவம்பர் 22 முதல் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஃபார்ம் பேசுபொருளாகியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக அண்மையில் நிறைவடைந்த டெஸ்ட் தொடரில், இருவரும் மிகவும் சராசரியான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

பார்டர் – கவாஸ்கர் தொடர் நெருங்கும் நிலையில், விராட் கோலியின் தற்போதைய ஃபார்மை வைத்து அவரை மதிப்பிடாதீர்கள் எனவும், பார்டர் – கவாஸ்கர் தொடரில் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐசிசியில் அவர் பேசியதாவது: விராட் கோலியின் திறமை குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமில்லை என ஏற்கனவே கூறியிருக்கிறேன். அவரது திறமையின் மீது எந்தவொரு சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவதை அவர் விரும்புவார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவதை மிகவும் விரும்புவார் என்பது எனக்குத் தெரியும். ஆஸ்திரேலிய மண்ணில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

பார்டர் – கவாஸ்கர் தொடரில் விராட் கோலி மீண்டும் அவரது பழைய ஃபார்முக்குத் திரும்புவார் என நம்புகிறேன். முதல் போட்டியிலேயே அவர் அதிக அளவில் ரன்கள் குவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் அவர் 3 சதங்களை மட்டுமே அடித்துள்ளார் என்ற புள்ளிவிவரத்தை பார்த்தேன். அது சரியாக இருப்பதாக தெரியவில்லை. ஆனால், அது சரி என்றால் அதற்கு கவனம் கொடுக்க வேண்டும் என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் விராட் கோலி முதல் முறையாக ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் இடம்பிடிக்கத் தவறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

Previous Post

“தப்பு செஞ்சவங்களே மன்னிப்பு கேட்கல; ஆனா விஜய்…” – தவெகவில் இணைந்த ஸ்நோலின் அம்மா உருக்கம்

Next Post

பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல்… 20 பேர் பலி; 30 பேர் காயம் -பாகிஸ்தானில் நடந்தது என்ன?..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல்… 20 பேர் பலி; 30 பேர் காயம் -பாகிஸ்தானில் நடந்தது என்ன?..

பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல்... 20 பேர் பலி; 30 பேர் காயம் -பாகிஸ்தானில் நடந்தது என்ன?..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In