Doctor Vikatan: சர்க்கரைக்கு மாற்றாக ஸ்டீவ்யா (Stevia) பவுடர் சேர்த்துக்கொள்ளச் சொல்கிறார்களே… அது என்ன… அதைச் சேர்த்துக்கொண்டால் சர்க்கரையால் வரும் பாதிப்புகள் வராதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

ஸ்டீவ்யா என்பது ஒருவகை தாவரத்திலிருந்து பெறப்படும் இனிப்புச்சுவை. அதாவது சர்க்கரைத்துளசி அல்லது சீனித்துளசி எனப்படும் செடியிலிருந்து பெறப்படும் இது, சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.
சர்க்கரையைத் தவிர்க்க நினைப்பவர்கள், அதே சமயம், இனிப்பையும் விட முடியாத நிலையில், சர்க்கரைக்கு மாற்றாக ஸ்டீவ்யா பொடியை எடுத்துக்கொள்ளலாம்.
ஸ்டீவ்யா என்பது சர்க்கரையைவிட பல மடங்கு அதிக இனிப்புச் சுவை கொண்டது. எனவே, மிகக் குறைந்த அளவு பயன்படுத்தினாலே போதுமானதாக இருக்கும்.