Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

"திமுக மொழியைத் தாண்டி விஞ்ஞான ரீதியாக ஏதும் சிந்திக்கவில்லை" – மருத்துவர் கிருஷ்ணசாமி விமர்சனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 27, 2025
in அரசியல் செய்திகள்
0
"திமுக மொழியைத் தாண்டி விஞ்ஞான ரீதியாக ஏதும் சிந்திக்கவில்லை" – மருத்துவர் கிருஷ்ணசாமி விமர்சனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தேனி மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று (மார்ச் 27) உள் இட ஒதுக்கீடு மற்றும் மாஞ்சோலை மலையக மக்களின் வாழ்வாதாரம் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

டாக்டர் கிருஷ்ணசாமி

அப்போது, “டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1000 கோடி ஊழல் என்றால் அமலாக்கத்துறை முறையாக ஆய்வு செய்யவில்லை. 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றிருக்கக் கூடும் என்பதால் அது குறித்து அமலாக்கத்துறை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்க வேண்டும் என்றால் ஓ.பி.எஸ் வெளியில் பேசுவதைத் தவிர்த்து, கட்சிக்குள் பேசி பிரச்னையைத் தீர்க்க வேண்டும்.

மேலும் 2026 தேர்தலில் அ.தி.மு.க வலிமையாக இருக்க வேண்டும் என்றால் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டும்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தேசியக் கல்விக் கொள்கை அரசியல்வாதிகளால் தயார் செய்யப்பட்டதில்லை. அறிவியலாளர்களால் தயார் செய்யப்பட்டது.

மற்ற நாடுகளில் எல்லாம் 8ஆம் வகுப்பிலேயே தொழிற்கல்வி கற்றுக் கொடுக்கிறது. ஆனால் இங்கு இன்னும் ஏட்டுக் கல்விதான் கற்றுத் தரப்படுகிறது.

டாக்டர் கிருஷ்ணசாமி
Ashwin : ‘இந்தி தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்’ – மாணவர்கள் மத்தியில் அஷ்வின் பேச்சு

தி.மு.க-வினர் மொழியை மட்டும் சிந்திக்கின்றனர். மொழியைத் தாண்டி விஞ்ஞான ரீதியாக ஏதும் சிந்திக்கவில்லை. 3 மொழி மட்டும் இல்லை 4 மொழி கற்றுக்கொண்டால் கூட தவறில்லை.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியைத்தான் கற்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. மத்திய அரசை எதிர்க்க வேறு வழியில்லாமல் தி.மு.க இந்தியை வைத்து அரசியல் செய்கிறது.

தமிழ் மொழி வளர்ச்சிக்காகத் தி.மு.க செய்தது என்ன? இந்தி கற்பதால் தமிழ் அழிந்து விடும் எனக் கூறுவது தவறு. தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது.

தமிழக மக்களுக்கு இந்தியன் என்ற உணர்வு இல்லாமல் தமிழகத்தைத் தனித்து வைத்து அரசியல் செய்வதற்காகத்தான் தி.மு.க-வினர் இந்தியை எதிர்க்கிறார்கள்.

திமுக

பட்டியலிலிருந்து தேவேந்திர குல வேளாளர் மக்களை வெளியேற்ற வேண்டும் என்பது எங்கள் கொள்கை. அதை நிறைவேற்றித் தருவோம் என்று கூறிய பா.ஜ.க எங்களை ஏமாற்றி விட்டதால்தான் கூட்டணியிலிருந்து வெளியேறினோம்.

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கூட்டணியில் புதிய தமிழகம் அங்கம் வகிக்கும். அப்போது எங்களது கொள்கை நிறைவேற்றப்படும்” என்றார்.

“லண்டன் சென்றபோது இந்தி பேசினாரா, ஆங்கிலம் பேசினாரா?” – அண்ணாமலையை சாடும் செந்தில் பாலாஜி

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs



.

Previous Post

தங்கக் கடத்தல் வழக்கு: மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்ட நடிகையின் ஜாமீன் மனு.. தொடரும் சிறை தண்டனை..

Next Post

சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சுதாகரனிடம் ஒரு மணி நேரம் விசாரணை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சுதாகரனிடம் ஒரு மணி நேரம் விசாரணை!

சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சுதாகரனிடம் ஒரு மணி நேரம் விசாரணை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In