Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“கல்யாணம் பண்ணுங்க, குழந்தை பெறுங்க..” கட்டாயப்படுத்தும் சீன அரசு… ஏன் தெரியுமா? | China’s University To Offer “How To Get Marriage “Course

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 8, 2024
in அரசியல் செய்திகள்
0
“கல்யாணம் பண்ணுங்க, குழந்தை பெறுங்க..” கட்டாயப்படுத்தும் சீன அரசு… ஏன் தெரியுமா? | China’s University To Offer “How To Get Marriage “Course
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த முயற்சியின் ஒருகட்டமாகவே திருமணம் தொடர்பான பாடத்திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் நேர்மறையான திருமணங்கள் (LGBTQவினருக்கு சலுகைகள் கிடையாது), குடும்ப கலாசாரத்தை மாணவர்களிடம் இந்தப் பட்டப்படிப்பு கற்றுக் கொடுக்கும். மாணவர்களின் வழியே பொதுமக்களுக்கு இந்தக் கருத்துகள் பிரசாரமாகக் கொண்டு செல்லப்படும். குடும்ப நல ஆலோசனை, உயர்தரமான திட்டமிடல், திருமணம் தொடர்பான பொருள்கள் மற்றும் சந்தையை விரிவுபடுத்துதல் இதில் முக்கிய திட்டங்களாக உள்ளன. அரசின் இந்த நடவடிக்கைகள் கேலிப்பேச்சுக்கும் ஆளாகியுள்ளன. ‘திருமணம் தொடர்பாக பட்டப்படிப்பு படிக்கிறவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன வேலை வாய்ப்பு கிடைக்கும்‘ என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் சிலரோ, ‘அரசே கல்யாண தரகர் வேலையைப் பார்க்கப் போகிறதா‘ என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, கொஞ்சம் நுட்பமாக கவனித்தால் இது சீனாவின் பிரச்னை மட்டுமே அல்ல என்பது புரியும். சர்வதேச அளவிலேயே திருமண விகிதங்கள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. திருமண வாழ்க்கை என்றாலே அலர்ஜியும், குழந்தைப்பிறப்பு என்றாலே பயமும் இன்றைய இளம் தலைமுறையினரிடம் உருவாகி வருகிறது.

வேலை வாய்ப்பின்மை, உத்தரவாதமற்ற பணிச்சூழல், வாழ்க்கை நடத்துவதற்கான செலவுகள் அதிகரிப்பது, கூட்டுக்குடும்பங்கள் ஒழிந்ததால் குழந்தை வளர்ப்பில் இருக்கும் சிரமம், கலவரப்படுத்தும் கல்விக்கட்டணங்கள், சுகாதார செலவுகள் என பல விஷயங்கள் இதைத் தீர்மானிக்கின்றன. முன்பைக் காட்டிலும் அதிகரிக்கும் விவாகரத்துகளும், பார்ட்னர் மீதான அதீத எதிர்பார்ப்புகளும் திருமணம் மீதான நம்பிக்கையை இளைஞர்களிடத்தில் சீர்குலைக்கின்றன. LGBTQ போன்ற நவீன கால கலாசாரங்களும் இதில் பெரிய தாக்கத்தை உண்டாக்குகின்றன.

உதாரணத்துக்கு, 1970 -களோடு ஒப்பிடும்போது அமெரிக்காவில் தற்போது 60 சதவிகிதமளவு திருமணவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது என்கிறார்கள். மில்லினியல் இளைஞர்களின் திருமண வெறுப்பு மனோபாவத்தை New Normal என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் சீனாவைப் போல எல்லா நாடுகளிலும் இது போன்ற ‘வாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்‘ என்கிற பட்டப்படிப்பு ஆரம்பித்தாலும் ஆச்சர்யமில்லை!



.

Previous Post

நாக சைதன்யா – சோபிதா துலிபாலாவுக்கு இன்று நிச்சயதார்த்தம்?

Next Post

ஒரு சாதாரண பானி பூரி விற்பனையாளர் சுதந்திர விழா கொண்டாட்டத்திற்கு அழைப்பு – குடியரசுத் தலைவர் அனுப்பிய அழைப்பி | A normal Pani puri vendor receives president’s invitation for Independence day celebration 2024

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒரு சாதாரண பானி பூரி விற்பனையாளர் சுதந்திர விழா கொண்டாட்டத்திற்கு அழைப்பு – குடியரசுத் தலைவர் அனுப்பிய அழைப்பி | A normal Pani puri vendor receives president’s invitation for Independence day celebration 2024

ஒரு சாதாரண பானி பூரி விற்பனையாளர் சுதந்திர விழா கொண்டாட்டத்திற்கு அழைப்பு – குடியரசுத் தலைவர் அனுப்பிய அழைப்பி | A normal Pani puri vendor receives president’s invitation for Independence day celebration 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In