தெலங்கானாவில் பரப்புரைக்கு இடையே காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி அரசுப் பேருந்தில் பயணம் செய்தார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 3 கட்டத்தேர்தல் முடிவடைந்த நிலையில், வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ள 4 ஆம் கட்டத் தேர்தலுக்கான பரப்புரையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், வரும் 13 ஆம் தேதி, 17 மக்களவைத் தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், மல்காஜ்கிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்காக ராகுல்காந்தி ஐதராபாத் சென்றிருந்தார்.
அப்போது, தெலங்கானா அரசு பேருந்தில் ராகுல்காந்தி பயணித்தார். அவருடன் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் அரசுப்பேருந்தில் சென்றார். ராகுல் காந்தியை கண்டதும் பேருந்தில் பயணித்தவர்கள் முண்டியடித்துக் கொண்டு செல்பி எடுத்தனர். அப்போது, பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து சேவை உள்ளிட்ட அரசின் திட்டங்கள் குறித்து ராகுல்காந்தி கேட்டறிந்தார்.
.
- First Published :
