Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உலகில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 12, 2024
in அரசியல் செய்திகள்
0
உலகில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு 53 விபத்துகள் நடப்பதாகவும், இதில் 19 பேர் உயிரிழப்பதாகவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கவலை தெரிவித்துள்ளார்.

உலகில் அதிக சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்திய ஆட்டோமொபைல் தொழில் சமீப காலமாக வேகமாக வளர்ந்து வரும் போதிலும், சாலைகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரை செய்துள்ளார். ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கத்தின் 64வது ஆண்டு மாநாட்டில் மத்திய அமைச்சர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய கட்காரி, சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் அனைத்து பங்குதாரர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

விளம்பரம்

நாட்டில் அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். மேலும் ஓட்டுநர்கள், உள்ளூர் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பற்றி அறிந்திருப்பதையும், வாகனங்களை ஓட்டுவது மற்றும் ஓட்டுவதில் நிபுணத்துவம் பெற்றிருப்பதை உறுதிசெய்யும் வகையில் ஓட்டுநர் பள்ளிகளை அமைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஒரு மணி நேரத்திற்கு 53 விபத்துகளும் 19 இறப்புகளும் ஏற்படுகின்றன. இரு சக்கர வாகனங்களில் 45 சதவீதம் விபத்துகளும், சாலையோரம் நடந்து செல்பவர்களால் 20 சதவீதம் விபத்துகளும் நடக்கின்றன என்றார். பயிற்சிப் பள்ளிகளை அமைத்தால், ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். இது உண்மையிலேயே சாதகமான தீர்வாக இருக்கும் என்றார். எனவே, OEM களை ஓட்டுநர் பள்ளிகளைத் திறக்குமாறு வலியுறுத்தினார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
“370வை யாராலும் கொண்டுவர முடியாது..” – காஷ்மீரில் ராஜ்நாத் சிங் சூளுரை!

சாலை விபத்துகள் மற்றும் இறப்புகளை குறைக்க ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்பையும் அவர் கோரினார். எதிர்காலத்தில் சாலை விபத்துகளை குறைப்பதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்ற முடியும். மேலும், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு சாலைகள் பாதுகாப்பானதாக மாற்றப்படும் என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள மோசமான சாலை கட்டுமானம் மற்றும் பலகைகளை சரிசெய்வதில் மத்திய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை கவனம் செலுத்தியுள்ளது என்றார். வாகனங்களின் பாதுகாப்பு குறித்தும், இந்தியா என்சிஏபியின் முக்கியத்துவத்தை குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
இனி சுங்கச்சாவடிகள் கிடையாது… ஆனால் சுங்கக் கட்டணம் உண்டு : மத்திய அரசின் புதிய முயற்சி!

பாரத் என்சிஏபி வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான வாகனங்களை உறுதி செய்ய உற்பத்தியாளர்களிடையே ஆரோக்கியமான போட்டியை உறுதி செய்யும். தேசிய கார் மதிப்பீட்டு திட்டம் (NCAP) என்பது இந்திய சந்தையில் விற்கப்படும் வாகனங்களுக்கான தனியுரிம விபத்து பாதுகாப்பு மதிப்பீடாகும். பயணிகளின் பாதுகாப்பு, குழந்தை பாதுகாப்பு, காரில் இருக்கும் பாதுகாப்பு உபகரணங்களின் அடிப்படையில் ஒவ்வொரு கார் மாடலையும் இது மதிப்பிடுகிறது.

விளம்பரம்

.



.

Previous Post

Ananda Vikatan – 18 September 2024 – கார்ட்டூன்: Questions Of All Time..! | cartoon September 18 2024

Next Post

Kolkata Case: வலுக்கும் கோரிக்கைகள்; தொடரும் போராட்டங்கள்; முதல்வரைச் சந்திக்க மருத்துவர்கள் முடிவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Kolkata Case: வலுக்கும் கோரிக்கைகள்; தொடரும் போராட்டங்கள்; முதல்வரைச் சந்திக்க மருத்துவர்கள் முடிவு

Kolkata Case: வலுக்கும் கோரிக்கைகள்; தொடரும் போராட்டங்கள்; முதல்வரைச் சந்திக்க மருத்துவர்கள் முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In