Last Updated:
எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், இரு பிரிவுகளாக நான்கு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
ஏழு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி (நேற்று) துவங்கியது. நடப்புச் சாம்பியனான பாகிஸ்தான், தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டு தோல்வியடைந்தது. பாகிஸ்தான் நடத்தும் இத்தொடரில், இந்திய அணி அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடவுள்ளது.
எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், இரு பிரிவுகளாக நான்கு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில், ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
குரூப் ஏ: பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம்.
குரூப் பி: தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான்.
மார்ச் 9 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியின் இடம் குறித்து இன்னும் முடிவாகவில்லை. இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால் துபாயிலும், இல்லையெனில் லாகூரிலும் இறுதிப்போட்டி நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
பரிசுத்தொகை எவ்வளவு?
இந்த நிலையில், 2008 ஆம் ஆண்டை விட இந்த முறை பரிசுத் தொகை 50% அதிகரிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் அணிக்கு $2.24 மில்லியன் பரிசாக வழங்கப்படும் எனவும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு $1.12 மில்லியன் வழங்கப்படும் என்றும், அரையிறுதியில் தோல்வியடையும் இரு அணிகளுக்கும் தலா $560,000 வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
February 20, 2025 12:38 PM IST

