கோபம் வருமா வராதா?
அம்பத்தூர் இப்தார் விருந்து, பொதுச் செயலாளர் கலந்துகிட்ட நிகழ்ச்சி. தளபதி விஜய்யின் முகமாகத்தான் நிகழ்ச்சி மேடைக்கு பொதுச்செயலாளர் வர்றார். அப்படியிருக்க அந்த நிகழ்ச்சியே சொதப்பலா நடந்து கடைசியில் உணவை வீணாக்கி குப்பையில கொட்டுறாங்கன்னா என்ன சொல்றது? ஏற்பாட்டாளர்கள் மீது கோபம் வருமா வராதா?

அந்தக் கோபத்தையே வெளிப்படுத்தினேன். நாம இப்படிச் சொல்றது சிலருக்கு பிடிக்க மாட்டேங்குது. சிலர்னு ஏன் சொல்லணும்? பொதுச் செயலாளரே கடுப்பாகிறாராம். வாய் மொழி உத்தரவாக, `பாலாஜியை கிட்ட சேக்க வேண்டாம். எந்த நிகழ்ச்சிக்கும் அவரைக் கூப்பிடாதீங்க’னு’ ஆனந்த் சார் சொல்லியிருக்கறதா சொல்றாங்க.
எனக்கு என்ன வருத்தம்னா புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்கோம். பல தரப்புலயும் ஏற்கனவே கடுப்புல இருக்காங்க. அடுத்த வருஷம் தேர்தல் வருது. அதனால கட்சியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கூர்ந்து கவனிச்சிட்டிருக்காங்க. ஏதாவது வில்லங்கத்துல சிக்க மாட்டாங்களானு பலரும் காத்திருக்கிற சூழல்ல ஏனோ தானோன்னு இருந்தா யாருக்கு நஷ்டம்? அதனால மனசு கேக்காமத்தான் சமயத்துல வாட்ஸ் அப் ஸ்டேட்டஸா வச்சிட்டுத் திரியறேன்” எனப் புலம்புகிறர்.
விரைவிலேயே நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து தன்னுடைய இந்த மனக்குமுறல்களையெல்லாம் கொட்டும் முடிவிலும் இருக்கிறாராம் பாலாஜி.!
