திமுக இளைஞரணி முதல் மாநில மாநாடு கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்றது. சுமார் 16 வருடங்களுக்குப் பிறகு 2வது மாநில மாநாடு நடைபெற உள்ளது.

திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது டிசம்பர் 17ம் தேதி இளைஞரணி மாநாடு நடத்தப்படவுள்ளதாக திமுக தலைமை இன்று அறிவித்துள்ளது.
இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2007 ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று கழக வரலாற்றில் முத்திரைப் பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞரணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து, வரும் டிசம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் 16 ஆண்டுகள் கழித்து இளைஞரணி மாநாடு நடைபெறவுள்ளது திமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

