மயிலாடுதுறை மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர். சுதாவிற்கு டி. மணல்மேடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான காடுவெட்டி, ரவணயன் கோட்டகம், பகுதியில் வீடு வீடாக சென்று செம்பனார்கோவில் மத்திய திமுக ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயக்குமார் மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள் வாக்கு சேகரித்தனர். இவருடன் திமுக மாவட்ட கவுன்சிலர் துளசி ரேகா ரமேஷ், கட்சியின் கிளை செயலாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.


