Wednesday, September 16, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

‘அதிமுக தொண்டர் மீது திமுக கொலைவெறித் தாக்குதல்’ : EPS கண்டனம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 22, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், சினிமா செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
1
‘அதிமுக தொண்டர் மீது திமுக கொலைவெறித் தாக்குதல்’ : EPS கண்டனம்!
9
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
”கழக உடன்பிறப்பு கார்த்திகேயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும்”

அதிமுக தொண்டர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா திமுக அரசு பதவியேற்ற நாள்முதல் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதையும்; ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றோம் என்ற மமதையில் திமுகவினரின் அராஜகங்கள், அட்டூழியங்கள், வன்முறைத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதையும், நான் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன்.

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகர மன்ற 2-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2022-ல் நடைபெற்ற தேர்தலில் கழக வேட்பாளரின் வெற்றிக்கு, நகர 2-ஆவது வார்டு கழக துணைச் செயலாளர் ஊ.ஹேமநாதன் மற்றும் அவருடைய சகோதரர் ஊ.கார்த்திகேயன் உள்ளிட்டோர் அரும்பாடுபட்டுள்ளனர்.

இத்தேர்தலில் தோல்வியடைந்த திமுக-வினர், கார்த்திகேயன் மீது கடந்த ஆண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியதால், அவர் 3 மாதங்கள் மருத்துவ சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியதாகத் தெரிய வருகிறது.

இந்நிலையில், மறைமலைநகர் நகரில் கடந்த 18.9.2023 அன்று உள்ளூர் கோயில் திருவிழா ஊர்வலத்தின்போது, தனது வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த கார்த்திகேயன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் திமுகவினர் பாட்டாசுகளை வீசி வெடிக்கச் செய்துள்ளனர்.

இதைத் தட்டிக் கேட்ட நிலையில், கார்த்திகேயன் அவர்களை திமுக-வினர் சரமாரியாகத் தாக்கியதால், பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

அன்புச் சகோதரர் கார்த்திகேயன் அவர்களை இழந்து வாடும் அவரது சகோதரரும், மறைமலைநகர் நகர 2-ஆவது வார்டு கழக துணைச் செயலாளருமான ரு.ஹேமநாதன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கழக உடன்பிறப்பு கார்த்திகேயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் காவல்துறை உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன்பு நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Previous Post

நீங்க எப்படிங்க “அப்படி” பேசலாம்.. மாஜியை கூப்பிட்டு திட்டிய EPS..!

Next Post

சனாதன சர்ச்சை.. உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தொகுதிக்கு ஒரு மினி விளையாட்டு அரங்கம் - பணிகள் தொடங்கியுள்ளதாக அமைச்சர் உதயநிதி தகவல்

சனாதன சர்ச்சை.. உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Comments 1

  1. Suriya Narayanan says:
    3 years ago

    This the real face of DMK

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In