இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சி.வி.சேகர், மா.கோவிந்தராசு, எஸ்.வி.திருஞானசம்பந்தம், அமைப்பு செயலாளர் `கல்யாண ஓடை” செந்தில் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், ஊழல் குறித்தும், பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், எதையும் கண்டு கொள்ளாத திமுக அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் ஆர்.காமராஜ் பேசுகையில், “பேரூராட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவரே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து, அதில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதில் நீதிமன்றம் ஆறு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
