Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

எடப்பாடி பழனிசாமி மீது திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வழக்கு…!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 18, 2024
in Default
0
எடப்பாடி பழனிசாமி மீது திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வழக்கு…!
11
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய சென்னை திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற மேம்பாட்டு உறுப்பினர் நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அதற்கு எதிர்வினையாற்றிய தயாநிதி மாறன், தன் மீதான அவதூறு பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அவர் பொதுவெளியில் மக்களிடத்தில் மன்னிப்பு கோராவிட்டால் வழக்கு தொடர இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மத்தியசென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியசென்னை தொகுதி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 95 சதவிகித்திற்கு மேல் செலவு செய்திருப்பதாகக் கூறினார். தனது தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட 17 கோடி ரூபாயில், மீதமுள்ளது 17 லட்சம் ரூபாய்தான் என்றும் அத்தனையும் மத்தியசென்னை தொகுதி வளர்ச்சிக்காக செலவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Previous Post

சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்… தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

Next Post

பிரதமர் திறந்து வைத்த திருவாரூர் – தஞ்சாவூர் புதிய தேசிய நெடுஞ்சாலை.. 50 நாளில் சாலைகள் உள்வாங்கியதால் அதிர்ச்சி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிரதமர் திறந்து வைத்த திருவாரூர் – தஞ்சாவூர் புதிய தேசிய நெடுஞ்சாலை.. 50 நாளில் சாலைகள் உள்வாங்கியதால் அதிர்ச்சி!

பிரதமர் திறந்து வைத்த திருவாரூர் – தஞ்சாவூர் புதிய தேசிய நெடுஞ்சாலை.. 50 நாளில் சாலைகள் உள்வாங்கியதால் அதிர்ச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In