மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், ரோம் நகர் பற்றி எரியும்போது, நீரோ மன்னன் ஃபிடில் வாசித்ததுபோல், திமுக அரசு கார் பந்தயம் நடத்துகிறது. இதற்கு மத்திய அரசின் ராணுவம், கடற்படை, துறைமுகத்துறையிலிருந்து 24 மணி நேரத்தில் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதைப்பற்றி அண்ணாமலை வாய் திறப்பாரா? அதனால்தான் சொல்கிறேன், திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே ரகசிய உறவிருக்கிறது என்று முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

