அதிமுக ஆர்ப்பாட்ட முடிவு
இருப்பினும் துரித நடவடிக்கை எடுக்காத திமுக அரசினை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான அறிவிப்பில், “அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையைக் கண்டித்தும்; தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், 21.5.2025- புதன்கிழமை காலை 9.30 மணிக்கு அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என அ.தி.மு.க அறிவித்து இருந்தது.
